உடலுக்கு ஏராளமான பலன்களை தரும் முருங்கைக்கீரை வைத்து சூப் !!
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை = 1 கட்டு
கருவேப்பிலை = 1 சின்ன கட்டு
சோம்பு = 1/2 ஸ்பூன்
நெய் = 1 ஸ்பூன்
தேங்காய்ப் பால் = ஒரு கப்பு
சோள மாவு = 1 ஸ்பூன்
மிளகு = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பச்சைமிளகாய் = 2பீஸ்
பட்டை = 1 பீஸ்
பால் = 1 கப்பு
பெரியவெங்காயம் = 2 பீஸ்
செய்முறை : 1
முதலில் முருங்கைக்கீரை இலையை தனியாக கிள்ளி, தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிவைக்கவும். இதேபோல வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை : 2
பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும், நெய் சூடேறியதும், சோம்பு, பட்டை சேர்க்கவும். வெடித்ததும், வெங்காயம்,பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு சோள மாவு சேர்த்து 2 லிட்டர் வரையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
செய்முறை : 3
நன்கு கொதித்ததும், கீரையை சேர்த்து, கீரை நன்கு வெந்து குழையும் வரை காத்திருக்கவும். கீரை குழைந்ததும், பால், தேங்காய்ப்பால், ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக்கிய மிளகு சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். இறுதியில் இறக்கி, கருவேப்பிலை கிள்ளிபோட்டு சூடாக பருகலாம்.*
No comments:
Post a Comment