அவகோடா பழத்தின் நன்மைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 26, 2022

அவகோடா பழத்தின் நன்மைகள்

அவகோடா பழத்தின் நன்மைகள்:


அவகோடா பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்

மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

 
ஆர்த்தரைட்டீஸ் வந்து கஷ்டப்படுபவர்கள் இந்த பழங்களை தின்றால் அவர்களின் மூட்டுவலி மறைந்துவிடும்.  வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் தோன்றக்கூடியது.  இந்தப்பழம் தின்றால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
 
எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமத்தினருக்கு இப்பழம் ஒரு வரப் பிரசாதம். எண்ணெய் சத்து மிகுந்த இப்பழம் அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.

 
சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்க இந்த பழத்தை நாம் சாப்பிடலாம்.  இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.

 
உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது.  செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
 
இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். 
 
மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.

 
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 
புற்றுநோய்ப் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.
 
அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.
 
கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம்.
 
சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது அவசியமாகும்.


No comments:

Post a Comment