பாதாம் பருப்பை தோல் நீக்காமல் சாப்பிட்டால் ஆபத்து! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 26, 2022

பாதாம் பருப்பை தோல் நீக்காமல் சாப்பிட்டால் ஆபத்து!

பாதாம் பருப்பை தோல் நீக்காமல் சாப்பிட்டால் ஆபத்து!


பாதாமை அப்படியே சாப்பிடலாமா? தோல் நீக்காமல் சாப்பிட்டால் ஆபத்து!! 


பாதாம் பருப்பை உட்கொள்ளும் முறை: பாதாம் பருப்பு பலருக்கும் பிடித்தமான உலர் பழங்களில் ஒன்றாகும்.

பாதாமில் பல வித நன்மைகள் உள்ளன. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது.

 பாதாமின் நுகர்வு மனித மூளைக்கு ஒரு சஞ்சீவியாக பார்க்கப்படுகின்றது. பாதாம் மரம் பொதுவாக மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

 ஆசியாவில் ஈரான், ஈராக், மக்கா, ஷிராஸ் போன்ற இடங்களில் பாதாம் மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. பாதாமை சரியான முறையில் உட்கொண்டால், உங்கள் மூளையின் நியூரான்களை செயல்படுத்துவது எளிது. 

எனினும், சரியான முறையில் பாதாமை உட்கொள்ள வேண்டும். பாதாம் பருப்பை முறையாக உட்கொள்வது பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


 பாதாமை தோலுடன் சாப்பிட வேண்டாம்:  காரணம் இவைதான்:

- டானின் உப்பு கலவை பாதாமில் உள்ளது.

 இதனை உட்கொள்வதால் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. அதனால் பாதாமை தோலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
- பெரும்பாலும் பலர் அவசரம் காரணமாக உலர் பாதாம் பருப்பை அப்படியே உட்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

 இப்படிச் செய்வதன் மூலம் பிட்டாவின் சமநிலையின்மை உடலில் அதிகரிக்கத் தொடங்குகிறது.

 இதனால் நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே, தோலுடன் பாதாமை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

- தோலுடன் பாதாம் சாப்பிடுவதால், அதன் சில துகள்கள் உங்கள் குடலில் சிக்கிக்கொள்ளும். இதன் காரணமாக வயிற்று வலி, எரிப்பு, வாயு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பாதாமை தோல் நீக்கி சாப்பிடுபது நல்லது.


 பாதாம் பருப்பை எப்படி சாப்பிடுவது? 

பல வித உணவு பண்டங்களின் தயாரிப்பில் பாதாம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தினமும் பாதாமை உட்கொள்பவர்கள், பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது நன்மை பயக்கும்?

 இதற்கு பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

- காலையில் தோலை எடுத்து பின்னர் சாப்பிடுங்கள். இது பாதாமின் சூட்டை குறைக்கிறது.

- பாதாம் பருப்பை காலையில் அரைத்து பாலில் சேர்த்து சாப்பிடலாம்.

- மேலும் இதனை வறுத்து மாலையில் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். 

உணவியல் நிபுணர்கள் ஒரு நாளைக்கு 5-8 பாதாம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.



No comments:

Post a Comment