கீரைகள் மற்றும் அதன் பயன்கள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 26, 2022

கீரைகள் மற்றும் அதன் பயன்கள்

கீரைகள் மற்றும் அதன் பயன்கள்:
1. அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

2. காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

3. சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


4. பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

5. கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

6. மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

7. குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

8. அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.

9. புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

10. பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
11. பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


12.பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

13. சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

14. வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும்.

15. முரங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

16. வல்லாரை கீரை - மூளைக்கு பலம் தரும்.

17. முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

18. புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

19. புதினாக்கீரை - இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

20. நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

21.  தும்பைகீரை - அசதி, சோம்பல் நீக்கும்.

22. முருங்கைகீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.

23. முள்ளங்கிகீரை - நீரடைப்பு நீக்கும்.

23. பருப்புகீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

25. புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.


26. மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

27மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

28. முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

29. சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

30. வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

31. தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

32. தவசிக்கீரை - இருமலை போக்கும்.

33. சாணக்கீரை - காயம் ஆற்றும்.

34. வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.

35. விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.

36. கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.

37. துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

38. துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

39. காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியைu நிறுத்தும்.

40. மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.



No comments:

Post a Comment