ஒரிஜினல் கருப்பட்டியை கண்டறிவது எப்படி? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, August 26, 2022

ஒரிஜினல் கருப்பட்டியை கண்டறிவது எப்படி?

ஒரிஜினல் கருப்பட்டியை கண்டறிவது எப்படி?

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?


கருப்பட்டியில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள். கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும். இது பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சு வடிகட்டும் போது கிடைக்கிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு, பானாட்டு என்றும் அழைப்பார்கள்‌. இருப்பின்னும், இதன் ஒரிஜினல் எது? போலி எது? என்பதை கண்டறிவது அவசியம்.


ஒரிஜினல் vs போலி (Original vs Fake)
சுவையை வைத்து கண்டறிவதற்கு, உண்ணும் போது அதன் சுவை நல்ல வாசனையுடன் இனிப்பாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி ஆகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தல் கருப்பும், பழுப்புக் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

ஒரிஜினல் கருப்பட்டி எவ்வளவு நாள் வீட்டில் இருந்தாலும், கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி , சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்து விடும்.


ஒரிஜினல் கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போலி கருப்பட்டியில், பளபளப்புடன் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டும். ஆனால், ஒரிஜினல் கருப்பட்டியில் கையில் எடுத்து உற்றுப் பார்த்தால் பளபளப்பு தன்மை இருக்காது.


No comments:

Post a Comment