மின்சார வாரிய ஊழியர்களின்
ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு
அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
மின்சார வாரிய ஊழியர்களின்
ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு
அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
சென்னை, ஆக.3-
மின்சார வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஓரிரு நாட்களுக்குள் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார வாரிய அதிகாரிகளுடன் சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-
பெய்து வரும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விருதுநகர், ஈரோடு, மதுரை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழையிலும் மின்சாரம் தடைபடாது
மழை காலத்தில் மின்சார வினியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 1.33 லட்சம் மின்சார கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. 10 ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு மின்சார கம்பிகளும், மின்மாற்றிகளும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் எவ்வளவு மழை பெய்தாலும் சீராக மின்சாரம் வினியோகம் செய்ய அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment