Diabetes: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உகந்ததா..? ஏன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..
உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் நன்மை பயக்கும்.
ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நீரழிவு நோய் என்பது உலகளாவிய நோயாக மாற துவங்கியுள்ளது.
சமீபத்திய ஆய்வின் முடிவில் ஒவ்வொரு வீடுகளிலும் ஏதேனும் ஒரு நபருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, சர்க்கரை நோயாளிகள் சில காய்கறிகளை சாப்பிடுவது உடல் நலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த காய்கறிகளை உணவில் சேர்க்கக் கூடாது என்பதை இங்கே விரிவாக படித்து தெரிந்துக்கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால், நீரழிவு நோயாளிகள் இதை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், இதில் கார்போஹைட்ரேட் அளவும் அதிகமாக உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இதனை தவிர்த்து, இதில் பீட்டா கரோட்டின், கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் நிறைய ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
இது தவிர உருளைக்கிழங்கில் அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது.
சோளம்:
சோளத்தின் கிளைசெமிக் குறியீடு 52 ஆகும், ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவில் இது கணக்கிடப்படவில்லை.
இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
இருப்பினும் இதை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதை அதிக நார்ச்சத்து உணவுடன் கலந்து சாப்பிடுங்கள்.
பட்டாணி:
பட்டாணியில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகின்றன, அதனால்தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
இதன் கிளைசெமிக் குறியீடு 51 ஆகும்.
அந்த வகையில் நீரிழிவு நோயில் பட்டாணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது குறைந்த அளவில் சாப்பிடவும்.
மொத்தத்தில், கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்தல் அவசியம்.
மாறாக வைட்டமின்கள் அதிகள் கொண்ட முட்டை, முளைகட்டிய பயிறு, சிக்கன், பச்சை காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவற்றை ஒருவர் உணவில் சேர்த்து வைத்து கொள்ளுதல் அவசியம்.
No comments:
Post a Comment