ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான பொது நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் தேர்வு 2 அமர்வுகளாக நடத்தப்பட்டிருந்தது. 10.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 9.05 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில் முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 24 மாணவர்கள் நூற்றுக்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
👉கற்பித்தல் துணைக்கருவிகள் TLM எளிமையான முறையில் ஒரு பட்டாம் பூச்சியை ஒரு காகிதத்தில் செய்வது எப்படி?
இதில் அதிபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தலா 5 பேருக்கு முழு மதிப்பெண் கிடைத்துள்ளது.
மேலும் ராஜஸ்தானில் 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும் 100 மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள். இவர்களை தவிர அரியானா, மராட்டியம், பீகார், அசாம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அதேநேரம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment