தலைமுடி நன்கு வளர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 8, 2022

தலைமுடி நன்கு வளர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

தலைமுடி நன்கு வளர உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !! பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட வழிவகுக்கும். செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளரும். 

ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும். செம்பருத்தி பூ அதிக குளிர்ச்சியைத் தரும் என்பதால் இரவு நேரங்களில் தேய்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். உடல் அதிகளவில் உஷ்ணமானாலும் முடி உதிர ஆரம்பிக்கும். இந்த உஷ்ணத்தையும் செம்பருத்தி பூ போக்கிவிடும். தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 

இதனை தலைமுடி உதிர்ந்து வழுக்கைப் போல் காட்சியளிக்கும் இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென மீண்டும் வளரத் துவங்கிவிடும். வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

No comments:

Post a Comment