பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்று ஸ்னாப்சேட்டும் சமூகவலைதளம் ஆகும். இதிலும் போட்டோ, வீடியோ, நண்பர்களுடன் சாட் செய்யலாம். விதவிதமான மோட்டில் போட்டோ, வீடியோ எடுக்க பெரும்பாலும் இந்த செயலியை பயன்படுத்துவர். அந்தவகையில், ஸ்னாப்சேட் இப்போது டூயல் கேமரா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது உங்கள் போனின் முன் மற்றும் பின்பக்க கேமரா என இரு கேமராங்களையும் பயன்படுத்தி போட்டோ, வீடியோ எடுக்கலாம். இதற்கு பல்வேறு பயனர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்னாப்சேட் மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் செயலியிலும் இந்த வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எப்படி பயன்படுத்துவது?
இந்த வசதியை பயன்படுத்த முதலில் ஸ்னாப்சேட் செயலிக்கு சென்று, கேமரா பக்கத்திற்கு சென்று டூயல் கேமரா ஆப்ஷன் கொடுத்து இதை பயன்படுத்தலாம். வீடியோ, போட்டோ எடுக்க இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பயனர்களை கவர இந்த வசதி நான்கு லே-அவுட்கள் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. vertical, horizontal, picture-in-picture and cutout என 4 லே-அவுட்கள் கொண்டுள்ளது.
அதோடு, மியூசிக், lenses, ஸ்டிக்கர் என கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது டூயல் கேமரா வசதி, ஐபோன் எக்ஸ்ஆர் வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment