தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய் : இரண்டில் எது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது..? - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 10, 2022

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய் : இரண்டில் எது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது..?

தேங்காய் எண்ணெய் vs ஆலிவ் எண்ணெய் : இரண்டில் எது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது..?

 நம்முடைய உடல் ஆரோக்கியமாக மற்றும் ஃபிட்டாக இருக்க சரியான சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை அறிவோம். கடைகளில் பல வகை சமையல் எண்ணெய்கள் இருப்பதால் ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடிய சரியான எண்ணெய்யை தேர்வு செய்யும் வேலையை கடினமாக்குகின்றன. ஆனால் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெய் என்ற தரவரிசையில் முன்னணியில் இருக்கின்றன. 

 ஆனால் உங்களின் அலல்து குடும்ப உறுப்பினர்களின் இதய ஆரோக்கியத்திற்காக இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றால், உங்கள் தேர்வு எதுவாக இருக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.. அமெரிக்கன் ஹெல்த் அசோசியேஷன் (AHA) குறைந்த நிறைவுற்ற கொழுப்பு (low saturated fat) மற்றும் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்ட எண்ணெய்களுக்கு மாற பரிந்துரைக்கிறது. இவை ஆரோக்கியமான அல்லது 'நல்ல' கொழுப்புகள் என்றும் கூறப்படுகின்றன.

 நல்ல கொழுப்பின் பங்கு: பொதுவாக நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் 4 முக்கிய டயட்டரி கொழுப்புகள் உள்ளன. இதில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உள்ளடக்கிய 'கெட்ட கொழுப்புகள்' அறை வெப்பநிலையில் (வெண்ணெய் போன்றவை) மிகவும் திடமானதாக இருக்கும். அதேசமயம் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (கனோலா எண்ணெய் போன்றவை) அதிக திரவமாக இருக்கும். 

 ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகளை ஒப்பிடும் போது நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க மற்றும் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. இது இதய நோயுடன் தொடர்புடைய ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது. மேலும் அழற்சி மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது.

 ஆலிவ் எண்ணெய், கனோலா எண்ணெய், பீனட் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் உள்ளிட்டவற்றில் நல்ல மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கி இருக்கின்றன. ஆலிவ் எண்ணெய் எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்தது சந்தேகத்திற்கிடமின்றி ஆலிவ் எண்ணெய் மிகவும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய். ஏனென்றால் இதில் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக அதே சமயம் நல்ல கொழுப்பு(மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள்) அதிகமாக இருக்கிறது. அதே நேரம் உடலுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. 

ஆலிவ் எண்ணெயில் சுமார் 14% சேட்ச்சுரேட்டட் ஆயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பாலிஅன்சாச்சுரேட்டட் 11% இருப்பதாகவும் தவிர 73% மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலமான oleic acid, வீக்கம் மற்றும் அழற்சியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் அதிகம் காணப்படும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. ஆலிவ் எண்ணெயுடன் போட்டி போடுகிறதா தேங்காய் எண்ணெய்..? ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளை ஏற்படுத்துவது முதல் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை கட்டுப்படுத்துவது வரை தேங்காய் எண்ணெயும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. 

 என்றாலும் ஆலிவ் எண்ணெய்யுடன் ஒப்பிடும் போது குறிப்பாக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையில் குறைவான பலன்களையே தேங்காய் எண்ணெய் வழங்குகிறது. மேலும் பொதுவாக நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) என்றே தேங்காய் எண்ணெய் வகைப்படுத்தப்படுகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படும் ஆரோக்கியமற்ற கொழுப்பு வகையாகும். தேங்காய் எண்ணெயில் 80 - 90 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஆலிவ் எண்ணெயை விட 6 மடங்கு அதிக நிறைவுற்ற கொழுப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 இரண்டில் இதயத்திற்கு நன்மை தருவது எது..? இதயத்திற்கு ஆரோக்கியம் தர கூடிய சமையல் எண்ணெய் என்று வரும் போது, தேங்காய் எண்ணெய்யை விட ஆலிவ் எண்ணெய் தான் மிகவும் சிறந்தது.

 ஏனென்றால் பார்த்தபடி தேங்காய் எண்ணெய் அதிக நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டுள்ளதால் இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. தவிர ஆலிவ் எண்ணெய் டைப் 2 நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தையும் இந்த 2 ஊட்டச்சத்துகளில் அக்கறை செலுத்தாததுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் - ஊட்டச்சத்து நிபுணர்கள் குறைப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

No comments:

Post a Comment