👉READ THIS ALSO தொண்டை கரகரப்பு தொல்லை நீங்க-Get rid of hoarseness in throat
முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை. முசுமுசுக்கை கீரையின் இலைகள் முக்கோண வடிவில் இருக்கும். இதன் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
முசுமுசுக்கை மூலிகை நுரையீரல் மற்றும் சுவாசக் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முசுமுசுக்கை கப நோய்களை சரிசெய்யும் செய்யும் மூலிகையில் முக்கியமானது. உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய முசுமுசுக்கை கீரையில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருக்கிறது.
👉READ THIS ALSO பல்வலி முற்றிலும் நீங்க எளிய மருத்துவம்-Simple medicine to get rid of toothache completely
முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி மதிய உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் போன்றவை குணமாகும். முசுமுசுக்கை இலையை தைலமாக தயாரித்து அதை வைத்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொண்டால் உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போன்றவை நீங்கும். இளநரை மற்றும் வழுக்கை ஏற்படாமல் தடுக்கும்.
👉READ THIS ALSO திராட்சைப் பழச் சாறு குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்-Consuming grape juice cures intestinal ulcer
பரட்டைக் கீரை, தூதுவளை கீரை, முசுமுசுக்கை கீரை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.
முசுமுசுக்கை இலையை சூரணமாக செய்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு, சுவாசநோய் போன்றவை குணமடையும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
No comments:
Post a Comment