👉CLICK HERE உடல் எடை குறைப்பால் ஏற்படும் மாற்றங்கள்
தேன் மற்றும் லவங்கப்பட்டையின் மருத்துவ குணங்கள்!
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்றாள் அவ்வைப் பாட்டி.
தேன் ஒரு இயற்கை உணவு. அவ்வைப் பாட்டி காலத்திலிருந்தே தேன் ஒரு அரிய விஷயமாக எல்லோரும் அதனைப் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய விஷயமாக இருந்திருக்கிறது. அக்காரணம் கொண்டே அவ்வைப் பாட்டி கடவுளுக்கு தேனை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.
தேன் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாதது. சில சமயங்களில் நீண்ட நாட்கள் உபயோகப் படாமல் இருந்தால் படிகங்கள் உருவாகி விடும். அப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து தேன் பாட்டிலின் மூடியை சிறிது திறந்து விட்டு பாட்டிலை சூடு தண்ணீருக்குள் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். தேன் மறுபடி உருகி பழைய நிலைக்குத் திரும்பும். தேனை ஒருபோதும் கொதிக்க வைக்கக் கூடாது. மைக்ரோ வேவ் அவனிலும் வைக்கக் கூடாது. இப்படி செய்வது தேனில் இருக்கும் இயற்கையான உயிர் சத்தை கொன்று விடும்.
வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்று மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இந்தக் கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் சொல்லுகிறார்கள்.
தேனின் இயற்கையான இனிப்பு, சரியான அளவில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கூட கெடுதல் செய்யாது.
இலவங்க பட்டையை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேன் ஒரு பாட்டில் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
இனி இவற்றை வைத்துக் கொண்டு என்ன என்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்:
இருதய நோய்:
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். . வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சில மருத்துவ மனைகளில் சில நோயாளிகளுக்கு இந்த தேன், லவங்கப் பட்டை சேர்ந்த உணவைக் கொடுத்து ஆராய்ந்ததில் இம்முடிவு தெரிந்தது.
மூட்டு நோய்:
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.
👉CLICK HERE ஒரிஜினல் கருப்பட்டியை கண்டறிவது எப்படி?
சிறுநீர் பை தொற்று நோய்:
சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.
கொலஸ்ட்ரால்:
16 அவுன்ஸ் டீ தண்ணீருடன் 2 மேசைக் கரண்டி தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு இறங்கிவிடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்திரவுகள் குறையும்.
ஜலதோஷம்:
ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.
வயிற்றுத்தொல்லை:
வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.
வாயுத் தொல்லை:
ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி:
தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.
அஜீரணக் கோளாறு:
இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும், அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.
ஃப்ளு ஜுரம்:
இந்த ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை தேனின் இயற்கைத் தன்மை அழித்து விடுகிறது.
நீண்ட ஆயுளுக்கு:
ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை மூன்று கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து டீ செய்யவும். கால் கப் வீதம் மூன்று அல்லது நான்கு முறை குடிக்கவும். சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது. இளமையிலேயே இந்த மாதிரி டீ பண்ணிக் குடித்து வந்தால், நூறு வயதுவரை கூட வாழலாம்.
முகப் பருக்கள்:
3 மேசைக் கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். இதப் பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் நேரடியாக இரவு படுக்கப் போகுமுன் பூசவும். காலையில் எழுந்திருந்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலம்பவும். தினசரி தொடர்ந்து செய்து வர முகப் பருக்கள் அடியோடு மறையும்.
சரும தொற்றுநோய்கள்:
தேனையும் இலவங்கப் பட்டை பொடியையும் சம அளவில் எடுத்து குழைத்து சொறி, சிரங்கு படை முதலியவற்றின் மேல் போட இவை மறைந்து விடும். தழும்பு கூட ஏற்படாது.
உடல் இளைக்க:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.
புற்று நோய்:
சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த ஆராய்ச்சியில் வயிறு, எலும்பு இவற்றில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட இந்த இரண்டு பொருட்களின் கலவையால் சரி செய்யலாம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மேசை கரண்டி தேன், ஒரு டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.
மிதமிஞ்சிய அசதி:
தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள். வயதானவர்களுக்கு மதியம் ஒருவித அயர்ச்சி ஏற்படும். பலவீனமாக உணர்வார்கள். அப்போது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்து, அதி சிறிதளவு இலவங்கப் பட்டை தூவி, காலை பல் தேய்த்தபின்னும் மதியம் மூன்று மணி அளவிலும் குடித்துவர, அலாதியான தெம்புடன் நடமாடுவார்கள். ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.
வாய் துர் நாற்றத்திற்கு : ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது இலவங்கப் பட்டை பொடி போட்டு வாய் கொப்பளித்து வர துர் நாற்றம் விலகும்.
காது கேளாமை: தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து காலை, இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை நீங்கும்.
இயற்கையுடன் இயைந்து வாழும்போதும், இயற்கை மருந்துகளை பயன்படுத்தும்போதும் நம் நோய்கள் தானாகவே அகன்று விடுகின்றன.
No comments:
Post a Comment