நீரை எப்போது அருந்த வேண்டும் ? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 2, 2022

நீரை எப்போது அருந்த வேண்டும் ?

நீரை எப்போது அருந்த வேண்டும் ?

👉CLICK HERE உடல் எடையைக் குறைக்க லெமன் வாட்டர் ட்ரை பண்ணுங்க
எப்போது எப்படி நீர் அருந்த வேண்டும்?

இப்போது காலையில் நீர் குடிக்கும் பழக்கம் பெருகி வருகிறது. பொதுவாக ஒரு மனிதனுக்கு காலையில் தாகம் இருக்குமா? இரவு முழுக்க தூக்கத்தில் கிடைத்த குளிர்ச்சியின் புத்துணர்ச்சியில் பெரும்பாலான நபர்களுக்கு காலை எழுந்தவுடன் தாகம் இருக்காது. அந்த நேரத்தில் நீர் குடிப்பது தேவையற்ற வீண் வேலை.

எப்போது தாகம் இருக்கிறதோ அப்போது நீர் குடித்தால் போதும். தாகத்திற்கு நீருக்குப் பதிலாக குளிர் பானங்களோ, டீ அல்லது காபி அருந்தக் கூடாது. தாகத்திற்கு நீர் தான் பொருத்தமானது. சுவையுள்ள பிற பானங்கள் அனைத்தும் உணவுப்பொருட்கள். அவற்றை நீருக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது.

அதே போல, பசித்து சாப்பிடும்போது நீர் அருந்த வேண்டியதில்லை என்பது பொது விதி. ஏனென்றால் பசி இருக்கும் போது தாகம் ஏற்படுவதில்லை. தாகம் இருக்கும் போது பசி ஏற்படுவதில்லை.

ஆனால், இந்த பொதுவிதி உணவுகளைப் பொறுத்து மாறுபடும். நாம் சாப்பிடுகிற உணவு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் தன்மையோடும், மசாலாப் பொருட்களின் மிகுதியால் நீர் தேவைப்படும் நிலையும் சில நேரங்களில் ஏற்படலாம். பொதுவிதியின்படி சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துதான் நீர் குடிப்பேன் என்று மறுக்க வேண்டியதில்லை. பொது விதியை விட உடலின் தேவைதான் மிக முக்கியம். சாப்பிடும் போது நீர் தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடிக்கலாம். அப்படி குடிப்பது செரிமானத்தை எளிமையாக்கும்.


தாகத்திற்கு நீர் அருந்தும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் அதன் அளவு பற்றியது. நாம் சாதாரணமாக நீர் குடிக்கும்போது ஒரு பாட்டிலில் நீரை ஊற்றுவது போல உதடு ஒட்டாமல் தூக்கிப் பிடித்து வாய்க்குள் ஊற்றுகிறோம். இப்படி ஊற்றும் போது பாட்டில் நிறைவது போல நம் இரைப்பை நிறைகிற வரை குடிப்போம். ஆனால் உடலின் தேவை எவ்வளவு என்பதை நாம் எப்படி உணர்வது?

நீர் குடிக்கும் போது உதடுகள் நனையும்படி, வாய் வைத்து குடிக்க வேண்டும். அவ்வாறு குடிக்கும் போது உடல் தேவையான அளவை மட்டுமே உள்ளே அனுமதிக்கும். கடகடவென்று உதடு படாமல் குடித்தால் தேவைக்கு அதிகமாக குடிக்க வேண்டியிருக்கும்.

"அகத்தில் உள்ளது முகத்தில் தெரியும்" என்பர். சீன மரபுவழி மருத்துவங்களின் அடிப்படையில் முகத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு உள்ளுறுப்போடு தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் உதடுகள் மண்ணீரலின் வெளிப்புற உறுப்பாகக் கருதப்படுகிறது. நம் உதட்டின் வடிவத்தை வரைந்தால் அது மண்ணீரலின் உருவத்தை ஒத்திருக்கும். எனவே, நீர் குடிக்கும் போது உதடுகளில் நீர் பட்டு, உள்ளே செல்வது மண்ணீரலையும் முழு உடலையும் குளிர்ச்சியாக்கும்.

நீர் குடிப்பதில் இந்த ஒரு மாற்றத்தை நாம் செய்வோமானால் உடலின் நீர்ச்சமநிலை எப்போதும் சரியாக இருக்கும்.

தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? எந்த தண்ணீர் நல்லது? என்ற தண்ணீரைப் பற்றிய இரண்டு கேள்விகளுக்கு விடை கண்டிருக்கிறோம். 


No comments:

Post a Comment