உடல் சோர்வாக இருக்கிறதா? ஹீயூமோகுளோபின் குறைபாடாக இருக்கலாம்: எச்சரிக்கை:
Low Hemoglobin Remedies: போதுமான தூக்கம் இருந்தாலும், நல்ல உணவு சாப்பிட்டாலும் சோர்வாகவும் அலுப்பாகவும் இருப்பதாக நீங்கள் அடிக்கடி உணர்கிறீர்களா?
இது இரத்தத்தில் குறைந்த அளவு ஹீமோகுளோபின் இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமான ஹீமோகுளோபின், உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் பணியை செய்கிறது.
மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் பலவீனம் அடிக்கடி ஏற்பட்டால் அது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் நம் உடல் காட்டும் அறிகுறிகளாக இருக்கலாம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உணவுகள்
உண்ணும் உணவே நமது உடலை இயக்கவும், ஆற்றலைக் கொடுக்கவும் எரிபொருளாக செயல்படுகிறது
சீரான உணவை உண்ணும்போது, சரியான முறையில், உடலுக்கு தேவையான அளவு எரிபொருள் கிடைக்கும்.
ஆனால் தொடர்ந்து உடலின் ஆற்றலுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால், உடல்நல சிக்கல்கள் தொடங்கும்.
இரும்புச்சத்து நிறைந்த பச்சைக் கீரை வகைகள் அதிலும் குறிப்பாக பசலைக் கீரை ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் உள்ளடக்கம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கீரைகள் அதிகரிக்கின்றன.
பேரிட்சை
இயற்கையான இனிப்பு கொண்ட பேரிச்சம்பழம் அனைவருக்கும் பிடித்த தின்பண்டமாகும். ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகளில் பேரிச்சம்பழம் ஒன்றாகும்.
பேரீச்சம்பழம் இரும்பின் இயற்கையான ஆதாரங்கள் கொண்டது.
பேரிச்சம்பழத்தில் இரும்புச் சத்து (Fe) உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்கத் தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது.
உலர் திராட்சை
இந்திய இனிப்பு உணவுகலில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று உலர் திராட்சை.
இதுவொரு இயற்கை இனிப்பு மட்டுமல்ல, இரும்பு மற்றும் தாமிரத்தின் சிறந்த மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உலர் திராட்சை உறுதுணையாக இருக்கிறது.
தினை
உடலின் ஹீமோகுளோபின் மற்றும் சீரம் ஃபெரிட்டின் அளவை திறம்பட மேம்படுத்த தினை பலனளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையைக் குறைக்கவும் தினை நல்லது.
எள்
ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி எள்ளுக்கு உண்டு. எள் மற்றும் எள்ளெண்ணெய் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதில், இரும்புச்சத்து, ஃபோலேட், ஃபிளாவனாய்டுகள், தாமிரம் மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
No comments:
Post a Comment