இந்திய உணவுகள் அதிக கலோரிகளைக் கொண்டது எனவும் இது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இல்லையென்றும் கூறப்பட்டு வருகிறது.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நேரத்திற்கு எடுத்து கொள்கின்றனர், அந்த நேரங்களை தான் நமது உடலும் பின்பற்ற தொடங்கிவிடுகிறது. அப்படி இருக்கையில் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவு நேரத்தை தவிர்த்து தவறான நேரத்தில் உணவு சாப்பிட்டால் உங்களுக்கு செரிமான கோளாறு மற்றும் ஆரோக்கியமற்ற குடல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதனால் எப்போதும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்பதை மறவாதீர்கள். ஆயுர்வேதத்தின் படி காப்பர் தட்டுகளில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது, பீங்கான் போன்ற பாத்திரங்களை பயன்படுத்தாமல் சாப்பிடுவதற்கு காப்பர் பாத்திரத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை தரும்.
மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க
காப்பர் கலந்த உணவு மற்றும் தண்ணீர் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் நல்லது. அதேபோல பழங்காலத்தில் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளி பாத்திரங்களில் சாப்பிடும் பழக்கத்தை மக்கள் கடைபிடித்து வந்தனர். மேலும் காப்பர் பாத்திரத்தில் உணவை சமைத்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது, மேலும் இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது, இதில் சமைக்கும் உணவு சுவையாகவும், ஊட்டச்சத்தை வழங்குவதாகவும் உள்ளது.
பெரும்பாலான இந்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு ஆரோக்கியமானதாக கருத்தப்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் எண்ணெய் உணவைத் தவிர்க்க வேண்டும், தைராய்டு இருந்தால் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். மேலும் நீங்கள் உண்ணும் உணவு ஜீரணமடைய வேண்டும், அதற்காக தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற பல உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment