அடிக்கடி* தலைவலி அவஸ்தைக்கு உட்படுபவர்கள் கீழ்க்காணும் உணவுக் கட்டுப்பாடுகளைக் கையாண்டால் தலைவலியை விரட்டலாம்.
1. புளிப்பு உணவுகளான எலுமிச்சை, தக்காளி, புளி ஆகியவற்றை நீக்க வேண்டும்.
2. மந்த உணவுகளான, தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொறியல், வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
3. உப்பில் ஊறிய பண்டங்களான ஊறுகாய், வற்றல், வடாம், போன்றவற்றை கண்டிப்பாய் நீக்குங்கள்.
4. இரவு வேளை உணவைச் சீக்கிரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உணவு நன்கு செரித்த பின் படுக்கைக்குச் செல்லுங்கள்.
5. இரவு உணவில் மலத்தைக் கட்டும் மாவுப்பொருட்கள், எண்ணெய் பதார்த்தங்கள், வாழைப்பூ, குருமா வகைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment