ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள், கிருமி தொற்று, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பல விதமான விஷ தொற்று மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு துளசி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது.
உலகத்தின் பல இடங்களில் கிடைக்கும் மூலிகை துளசி. முக்கியமாக இந்தியா, இத்தாலி, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் துளசி செடி அதிகம் காணப்படுகிறது. இதன் பிறப்பிடம் இந்தியாவாகும்.
பல வகையான ஆயுர்வேத குறிப்புகளில் துளசியில் 3 வகைகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை ராம துளசி, ஷயமா துளசி மற்றும் வன துளசி ஆகும்.
இந்த ராமதுளசி என்பது பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். சியாமா துளசி என்பது லேசான நீல நிறத்தில் இருக்கும். மற்றொன்றை காட்டுத்துளசி என்று கூறுவார்கள்.
இந்த 3 துளசிகளிலும் பல்வேறு வகையான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.
இதில் பச்சைத் துளசி பல இடங்களிலும் பயன்படுகிறது. பல வீடுகளிலும் கிடைக்கிறது.
இந்த துளசியில் இருக்கும் நறுமணமானது மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல சுவையும் உடையது.
துளசியின் சாறு என்பது பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக ஜலதோஷம், தலைவலி, வயிற்று பிரச்சினைகள், கிருமி தொற்று, இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என பலவிதமான விஷ தொற்று மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கு துளசி இலைச்சாறு கொடுக்கப்படுகிறது.
இது பல ஆண்டுகளாக ஆயுர்வேத முறைகளிலும் செய்யப்படுகிறது. இதை மூலிகை தேநீராகவும் கொடுக்கலாம்.
இது பொடி வடிவிலும் கிடைக்கிறது. அல்லது பச்சை இலையையும் சாப்பிடலாம், நெய் கலந்தும் சாப்பிடலாம்.
துளசி இலையை தேன், இஞ்சி போன்றவற்றில் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
துளசி இலையை தண்ணீரில் கொதிக்கவிட்டு சாப்பிடும்போது தொண்டை புகைச்சல் போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
துளசி உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
தினமும் 12 இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். துளசி என்பது ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
அல்சர் மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்கிறது.
துளசியின் விதையை பாலில் கலந்து குடிக்கும்போது நல்ல கிருமி நாசினியாக செயல்படுகிறது.
உடலில் உள்ள அனைத்து விதமான கிருமிகளையும் அழித்துவிடுகிறது. துளசி சிறுநீரகத்தை வலுப்படுத்துகிறது.
துளசி இலை மற்றும் தேனை தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைந்து விடும் என்று கூறுகிறார்கள்.
துளசியை சந்தனத்துடன் சேர்த்து அதை அரைத்து அதை நெற்றியில் தடவி வந்தால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது
.
Basil is full of medicinal properties
Tulsi leaf juice is given for colds, headaches, stomach problems, germ infections, heart related problems, many types of poisonous infections and malaria.
Basil is an herb found in many parts of the world. Tulsi plant is mainly found in countries like India, Italy, Thailand and Vietnam. Its origin is India.
Many Ayurvedic references mention that there are 3 types of Tulsi. They are Rama Tulsi, Shayama Tulsi and Vana Tulsi. This Ramatulasi is green in color. Siama tulsi is light blue in color.
The other is called wild basil. These 3 tulsis are rich in various benefits. Green basil is used in many places. Also available in many homes.
The aroma of this Tulsi is amazing. It has good taste.
Tulsi juice cures various ailments. Tulsi leaf juice is given especially for colds, headaches, stomach problems, germ infections, heart related problems, various poisonous infections and malaria.
It has also been practiced in Ayurvedic systems for many years. It can also be given as herbal tea. It is also available in powder form.
Or you can also eat green leaves and mix it with ghee. Tulsi leaves mixed with honey and ginger can get rid of problems like asthma, cough and cold.
Boiling tulsi leaves in water and eating them can get rid of problems like throat congestion.
Tulsi boosts immunity in the body. Also controls blood clotting.
Controls blood sugar levels. Eating 12 leaves daily is a good remedy for all kinds of problems in the body. Tulsi is a blood purifier.
Cleanses ulcers and bacteria in the mouth.
Tulsi seeds mixed with milk act as a good antiseptic. It destroys all kinds of germs in the body. Basil strengthens the kidneys.
Consuming Tulsi leaves and honey continuously for 6 months is said to reduce kidney related problems. Grinding basil with sandalwood and applying it on the forehead is said to provide instant relief from headaches.
Tulsi Theertha is also offered to devotees in Perumal temples.
No comments:
Post a Comment