வெள்ளரிக்காயின் நன்மைகள் Cucumber is good - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 10, 2022

வெள்ளரிக்காயின் நன்மைகள் Cucumber is good

வெள்ளரிக்காயின் நன்மைகள் Cucumber is good
கருவளையம் நீங்க டிப்ஸ்

 பகிர்வு  இந்த கிரீம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், விட்டமின் இ கேப்ஸ்யூல், ஆலுவேரா ஜெல், கிரீன் டீ பவுடர் அவ்வளவுதாங்க. 

இந்த பொருள்கள் தான் உங்க கண் கருவளையத்தை நீக்க போகுது. முதலில் வெள்ளரிக்காயை நன்றாக சீவி அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

 அதே போல் உருளைக்கிழங்கையும் சீவி அதையும் வடிகட்டி சாறு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

 இப்பொழுது இதில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்தான் இந்த கிரீன் டீ பவுடர். 


இதை நீங்கள் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. 

உங்கள் வீட்டில் இருக்கும் இந்த கிரீன் டீ பவுடரில் சிறிதளவு எடுத்து கால் டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தாலே போதும். 

அதில் உள்ள சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி விடும் இதையும் வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். 

 இப்போது ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறு, ஒரு ஸ்பூன் கிரீன் டீ சாறு, இரண்டு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் (முடிந்த வரையில் ஆலுவேரா ஜெல் இயற்கையானதாக இருந்தால் நல்லது)

 இத்துடன் ஒரு விட்டமின் இ கேப்ஸ்யூல் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் கலக்கினாலே போதும் ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும்.

 இதை தினமும் இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் உங்கள் முகத்தை நன்றாக அலம்பி விட்டு, துடைத்த பிறகு உங்கள் கண்களை சுற்றி இந்த கிரீமை தடவி லேசாக ஒரு மசாஜ் கொடுத்து விட்டு அப்படியே கூட உறங்கி விடலாம்.

 இதை தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தாலே போதும் உங்கள் கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

 இவ்வளவு எளிமையாக உங்கள் கருவளைய பிரச்சனைக்கு தீர்வு இருக்கும் போது தேவையற்ற இந்த கெமிக்கல் கலந்த கிரீம் இனி எதற்கு?.

 இந்த அனைத்து பொருட்களிலும் இருந்து ஒரு ஸ்பூன் சாறு மட்டுமே சேர்த்து தயார் செய்த இந்த பேஸ்டை ஒரு வாரம் வரை நீங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
Tips to get rid of hemorrhoids Sharing

The ingredients requirned to make this cream are Potato, Cucumber, Vitamin E Capsule, Aloe Vera Gel, Green Tea Powder. These are the things that will remove your dark circles.

First comb the cucumber well and filter it and extract the juice. Similarly, mash the potato and strain it and keep the juice. Now the important ingredient added in this is green tea powder. You don't need to boil it in water. Just take a small amount of this green tea powder in your home and put it in a quarter cup of water and let it soak for ten minutes. All the juice in it will come down in that water and filter it and take it separately.


Now in a bowl, add one spoon of potato juice, one spoon of cucumber juice, one spoon of green tea juice, two spoons of aloe vera gel (preferably if the aloe vera gel is natural) and one vitamin E capsule and mix it well for a minute to make a paste.

Apply this to your face every night before you go to sleep, after cleansing, apply this cream around your eyes and give a light massage and leave it to sleep. Applying this continuously for four days will make the dark circles around your eyes disappear.

Why use this unnecessary chemical cream when there is such a simple solution to your ovarian problem? You can use this paste prepared by adding only one spoon of juice from all these ingredients and keep it in the bridge for up to a week.

No comments:

Post a Comment