4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறிவியல் - பாடம் 1 - பசுமை சுற்றுச்சூழல் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SCIENCE - LESSON 1 -GREEN ENVIRONMENT- BOOK BACK QUESTION ANSWERS - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, December 29, 2022

4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறிவியல் - பாடம் 1 - பசுமை சுற்றுச்சூழல் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SCIENCE - LESSON 1 -GREEN ENVIRONMENT- BOOK BACK QUESTION ANSWERS

4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - அறிவியல் - பாடம் 1 - பசுமை சுற்றுச்சூழல் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SCIENCE - LESSON 1 -GREEN ENVIRONMENT- BOOK BACK QUESTION ANSWERS

               PREPARED BY THULIRKALVI TEAM 

பக்கம் 75

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கழிவு மேலாண்மை  செயல்களில் முதல் படி எது?

(அ) கழிவுகளை அகற்றுவது (ஆ)கழிவுகளை பிரித்தல்     (இ) கழிவு சேகரிப்பு

விடை : (ஆ)கழிவுகளை பிரித்தல்

2. மக்காத அல்லது உயிரி சிதைவு  அடையாத கழிவு எது?
(அ) காகிதக் குவளை  (ஆ)நெகிழித் தட்டு (இ)தேங்காய் ஓடு

விடை : (ஆ)நெகிழித் தட்டு

3. _________ அதிக குப்பைகளை  ஈர்க்கிறது, எனவே எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில்
வைப்பது முக்கியம்.

(அ) கழிவு சேகரிப்பு (ஆ) சுற்றுச்சூழல் (இ) குப்பை 

விடை : (ஆ) சுற்றுச்சூழல்

4 ._________ என்பது மூன்று R இல் உள்ள முதல் R ஆகும்.
(அ) மறுபயன்பாடு   (ஆ) குறைத்தல் (இ) மறுச்சுழற்சி

விடை : ஆ) குறைத்தல்

II. கோடிட்ட இடங்கைள நிரப்புக.

1. _________ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

(ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல் /ஒரு நெகிழி பையில் வேண்டாம் என்று சொல்வது)
விடை : ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்

2. எளிதில் மக்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள்  மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க
_________ பயன்படுகிறது.(நெகிழி / மூங்கில்)

விடை :  மூங்கில்

3. _________ நமது சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
(நெகிழி மாசுபாடு / ஒளி மாசுபாடு)

விடை : நெகிழி மாசுபாடு

4. _________ ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் ஆகும்.

(கண்ணாடி / பல அடுக்கு நெகிழி)

விடை : பல அடுக்கு நெகிழி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நெகிழிக் கழிவுகள்      - அ) மூன்று R கள்

2. கழிவுகளை பிரித்தலின் நான்காம் படி - ஆ)மக்கும் தன்மை  அற்றது

3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் - இ) சுற்றுச்சூழலை பாதிக்கும் 

4. சில்வர் பத்திரம் - ஈ)கழிவுகளை அகற்றல

விடை : 1) இ         2)  ஈ         3) அ         4) ஆ

பக்கம் 76

V. சரியா, தவறா என எழுதுக.

1. 3R கள் செயல் முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவதற்கு செல்லும் கழிவுகளின் அளவு
குறைக்கபடுகின்றது. 
விடை :சரி

2. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை  என்பர்.விடை : தவறு

3. நெகிழிப்பை ,தெர்மாேகோல் மற்றும் பல அடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சி பொருள்களாகும்.
விடை : தவறு

4. குப்பைகளை முறையாக பிரிக்கக்கூடாது.
விடை : தவறு


VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

1. மூன்று R கள் என்றால் என்ன?
விடை :குறைத்தல், மறுபயன்பாடு  மற்றும் மறுசுழற்சி  என்பதாகும்

2. மக்கும் கழிவு என்றால் என்ன?
விடை :உயரிசிதைவிற்கு  உட்படும் பொருள்கள் மக்கும் கழிவு ஆகும்

3. கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிகளை எழுதுக.
விடை :கழிவுகளை பிரித்தல்
கழிவுகளை சேகரித்தல்
கழிவுகளை மறுசுழற்சி செய்தல் 
கழிவுகளை அகற்றுதல்

4. மறுசுழற்சி செய்யக்கூடிய  ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை :காகிதம்  மற்றும் அட்டை
நெகிழி
உலோகங்கள்
கண்ணாடி 
PET குடுவை போன்றவை ஆக்கும்


VII. பின்வருபவைகளுக்கு விடை  தருக.

1. நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக்கழிவுகளை கையாளுவீர்கள்?
 விடை :மூன்று R கள் மூலம் கழிவுகளை கையாளலாம்

குறைத்தல் 
கழிவுப் பொருள்களை உருவாக்குதல் அல்லது பயன்படுத்துதல் 

மறுபயன்பாடு 
ஒரு பொருளை மீண்டும்  மீண்டும்  ஒரே பயன்பாடிற்கோ  அல்லது வேறு  பயன்பாடிற்கோ உபயோகப்படுத்துதல் 
எ.கா : ஊறுகாய் ஜாடி

மறுசுழற்சி 
பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள்களிலிருந்து  புதிய பொருள்களை உருவாக்குதல் 
எ.கா : PET குடுவை நெகிழி நூல்களாக மாற்றப்பட்டு விளையாட்டு ஆடைகள் தயாரிக்கலாம் 

2. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை :
நெகிழிப் பைகள் 
நெகிழி தட்டுகள்
நெகிழி நீர் பைகள் 
பழரசம் உறிஞ்சும் நெகிழி குழாய்கள் 
உணவு பானம்  அடைக்கும் நெகிழிப்பைகள்


3. மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை :
புதிய பொருள்களை உருவாக்குதல் 
நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களைச் சேமிக்க உதவுகிறது 
புதிய காகிதங்களை  தயாரிக்க உதவுகிறது 

PET குடுவை நெகிழி நூல்களாக மாற்றப்பட்டு விளையாட்டு ஆடைகள் தயாரிக்கலாம் 

பழைய கண்ணாடித்துண்டுகள்  புதிய கண்ணாடி பொருள்கள் தயாரிக்க உதவுகிறது 

உடைந்த உலோகப் பொருள்கள் புதிய பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன 



4. சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பொருள்கள் என்றால் என்ன?
விடை :
உரிசிதைவிற்க்கு  உட்படும் பொருள்களான மக்கும் பொருள்கள் சுற்றுசுழலுக்கு உகந்த பொருள்களாகும் 

எ.கா : பாக்கு மட்டைதட்டு, வாழை இலை, மூங்கில் பொருள்கள்

No comments:

Post a Comment