4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூக அறிவியல் - பாடம் 1 - உலகெலாம் தமிழர்கள் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SOCIAL SCIENCE - LESSON 1 -TAMILS AROUND THE WORLD- BOOK BACK QUESTION ANSWERS - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, December 29, 2022

4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூக அறிவியல் - பாடம் 1 - உலகெலாம் தமிழர்கள் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SOCIAL SCIENCE - LESSON 1 -TAMILS AROUND THE WORLD- BOOK BACK QUESTION ANSWERS

4ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூக அறிவியல் - பாடம் 1 - உலகெலாம் தமிழர்கள் - புத்தக வினா விடைகள் 4TH STD -3RD TERM - SOCIAL SCIENCE - LESSON 1 -TAMILS AROUND THE WORLD- BOOK BACK QUESTION ANSWERS


                PREPARED BY THULIRKALVI TEAM

பக்கம் 111

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. இலங்கையின் அலுவலக மொழிகளில் ஒன்று ____________ ஆகும்.

அ) மாண்டரின்  ஆ) இந்தி  இ) தமிழ்    ஈ)சமஸ்கிருதம்

விடை : இ) தமிழ்

2. நவீன சிங்கப்பூர் ____________ இல் நிறுவப்பட்டது.

அ) 1819       ஆ) 1820     இ) 1947      ஈ) 1835

விடை : அ) 1819     

3. பண்டைய காலங்களில், மலேசியாவில் உள்ள கெடா மாநிலம் கடல் வழியாக தமிழ்நாட்டின் ____________ உடன் இணைக்கப்பட்டிருந்தது.

அ) விசாகப்பட்டினம் ஆ) நாகப்பட்டினம் இ) மதுரை ஈ) சென்னை

விடை : ஆ) நாகப்பட்டினம்

4. மியான்மரின் முதன்மையான சமயம் ____________ ஆகும்.

அ) இந்து  சமயம்ஆ)  சமண  சமயம் இ) புத்த சமயம்   ஈ) சீக்கிய சமயம்

விடை : இ) புத்த சமயம்

5. ஆங்கிலேயர்கள் மொரீஷியஸ் கைப்பற்றிய ஆண்டு____________ஆகும்.

அ) 1810     ஆ) 1820    இ) 1910     ஈ) 1920

விடை : அ) 1810 

பக்கம் 112

II. சரியா, தவறா என எழுதுக.

1. மலேசியாவில் பல்லவர்களும் சோழர்களும் செல்வாக்கு பெற்றிருந்தனர். விடை : ( சரி

2. தென் பசிபிக் பகுதியில் உள்ள எரிமலை தீவுகளின் கூட்டம் பிஜி ஆகும். விடை : (சரி )

3.மன்னர் அனவர்தா மின்சாவின் மகன் கியான்சித்தா ஆவார். விடை : ( சரி)

4. ரீயூனியன் தீவு என்பது, பிரெஞ்சுவெளியுறவுத் துறையின்  ஒரு பகுதியாகும்.விடை :  (சரி )

5. தமிழ்நாட்டில் மட்டுமே தமிழர்கள் வாழ்கின்றனர். விடை : (தவறு )

III. பின்வருவனவற்றைப் பொருத்துக

1. ஆனந்தா கோயில் -அ) சர் தாமஸ் ஸ்டாபோர்ட் ராஃபிள்ஸ்

2. துணைநிலை ஆளுநர் - ஆ) ரத்து ஜோனி

3. திருகுறளி - இ)நாகப்பட்டினம்

4. அஞ்சல் அருங்காட்சியகம் -ஈ) மியான்மர்

5. பண்டைய துறைமுகம் - உ)மொரீஷியஸ்

விடை : 1)  ஈ         2) அ     3)ஆ       4) உ      5)இ

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கடந்தக்கால உறவுகளை விவரிக்கவும்.

விடை : தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவுகள்  2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாகும்.

பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பல்கள் தற்போதைய மலேசியா  மாநிலமான கெடாவை அடைந்தன.

பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் மலேசியாவின் பண்பாடு மற்றும் அரசியலில் தமிழர்கள் மிகப்பெரிய  தாக்கத்தை ஏற்படுத்தினர்.

மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லிகோர் கல்வெட்டில் மலேசியாவுடன் தமிழ்நாடு கொண்டிருந்த வணிக உறவு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மலேசியாவில் கொண்டாடப்படும்  இந்து பண்டிகைகளில்  தைப்பூசமும்  ஒன்றாகும்.

மலேசிய பயிற்று மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். 

2. ரீயூனியன் தீவு - குறிப்பு வரைக.
விடை : மொரிசியஸ் அரிகிலுள்ள  ரீயூனியன் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு ஆகும்.

இது பிரெஞ்சு வெளியறவுத் துறையின் ஓர் அங்கமாகும்.

அங்கோர் வாட் மலைக்கோயில் புகழ்பெற்றதாகும்.

3. அலுவலக மொழிகளில் ஒன்றாக  தமிழ்மொழியினைக் கொண்ட நாடுகளின்
பெயர்களை குறிப்பிடுக.
விடை : 

இலங்கை 

சிங்கப்பூர்

மொரிசியஸ்

4.மொரீஷியஸ் நாட்டைக் கட்டமைத்ததில் தமிழர்களின் பஙகளிப்பினைக் கூறுக.
விடை : தமிழர்கள் இத்தீவை வாழ்வதற்கு  ஏற்றதாக மாற்றுவதற்கும் பல கட்டிடங்களைக் கட்டுவதற்கும்
பிரெஞ்சுகாரர்களுக்கு உதவிபுரிந்தனர்.

போர்ட் லூயிஸில் உள்ள அஞ்சல் அருங்காட்சியகம்
தமிழர்களால் கட்டப்பட்டது.  


5. மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகை எது?
 விடை :மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் தைப்பூசம் ஒன்றாகும்.

ஆ. மியான்மர் நாட்டின் தேசத் தந்தை யார்?

விடை : அனவர்தா மின்சா.. இவர் மியான்மரின் தேசத் தந்தையாகவும் மிகவும் புகழ்பெற்ற  மன்னர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். 

No comments:

Post a Comment