PREPARED BY THULIRKALVI TEAM
1. உலா வரும் செயற்கைக்கோள்
பக்கம் 1
பொருள் அறிவோம்
வானில் உலா வரும் செயற்கைக்கோளைப் பற்றி இப்பாடல் கூறுகிறது. உலகைச்சுற்றிவரும் இச்செயற்கைக்கோள், நமக்கு அளவில்லாத பயன்களை வழங்குகிறது.மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது. தகவல் தொடர்புக்கு உதவுகிறது.வானிலை குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது.
வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது. கனிமவளத்தையும் கடல்வளத்தையும் குறிப்பிடுவதோடு ஆழிப்பேரலை (சுனாமி) போன்றபேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிர்களையும் காக்கிறது.
பக்கம் 2
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!
1. மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......................................
அ) மண்ணி + லுள்ள ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள ஈ) மண்ணில் + உள்ளே
விடை : ஈ) மண்ணில் + உள்ளே
2. நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) நிழள் + படம் ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம் ஈ) நிலை + படம்
விடை : இ) நிழல் + படம்
3. உண்மை என்ற சொல்லின் பொருள் ...............................................
அ) பொய் ஆ) தவறு
இ) சரி ஈ)மெய்
விடை : ஈ)மெய்
4. நற்பயன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................
அ) நல்ல + பயன் ஆ) நன்மை + பயன்
இ) நல் + பயன் ஈ) நற் + பயன்
விடை : ஆ) நன்மை + பயன்
5. அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ...............................................
அ) பக்கத்தில் ஆ) எதிரில்
இ) அண்மையில் ஈ) தொலைவில்
விடை : ஈ) தொலைவில்
வினாக்களுக்கு விடையளிக்க
1. ‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது எது?
விடை : பறவை கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள் ஆகும்
2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக.
விடை :
(1)பூமியில் உள்ள கனிம வளங்களையும் கடல் வளங்களையும் செயற்கைக்கோள் நமக்கு காட்டுகிறது.
(2) மழை, புயல் வருவதை நமக்கு முன்னறிவித்து உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்படுவதைக் குறைகிறது.
பக்கம் 3
No comments:
Post a Comment