பயிற்சி 1.2
PAGE NO 6
1. 6 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் உள்ள செவ்வத்தை உருவாக்கத் தேவையான
கம்பியின் நீளம் எவ்வளவு?
விடை :
தேவையான
கம்பியின் நீளம் எவ்வளவு? = செவ்வகத்தின் சுற்றளவு
= 2(நீளம் + அகலம் )
=2(6 + 3)
=2(9)
=18செ.மீ
2. ஒரு செவ்வகத்தின் நீளம் 14 மீ மற்றும் அகலம் 10 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
நீளம்= 14 மீ அகலம் = 10 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 2(நீளம் + அகலம் )
=2(14 + 10)
=2(24)
=48மீ
3 . ஒரு சதுரத்தின் பக்கம் 7 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
சதுரத்தின் பக்கம் = 7மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 X பக்கத்தின் நீளம்
=4 X 7
=28மீ
4 .340மீ நீளமும் 160 மீ அகலமும் கொண்ட ஒரு நிலத்தை 2 முறை சுற்றி வருகிறோம்
எனில், நாம் கடக்கும் தூரத்தைக் கிலோமீட்டரில் காண்க.
விடை :
நீளம் = 340மீ அகலம் = 160 மீ
நிலத்தின் சுற்றளவு = 2(நீளம் + அகலம் )
=2 (340 + 160)
=2 (500)
= 1000 மீ
2 முறை சுற்றும் போது கடக்கும் தூரம் = 2 X 1000 மீ
= 2000 மீ
=2 கி.மீ
5. சஞ்சு என்பவர் நாள்தோறும் ஒரு சதுரவடிவப் பூங்காவை 10 முறை சுற்றி வருகிறார்.
பூங்காவின் பக்க அளவு 110 மீ எனில், ஒரு நாளில் சஞ்சு கடக்கும் தூரத்தைக்
கிலோமீட்டரிலும், மீட்டரிலும் காண்க.
விடை :
பூங்காவின் பக்க அளவு = 110 மீ
ஒரு முறை சுற்றி வருவது = சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு
= 4 X பக்கம்
= 4 X 110
= 440மீ
10 முறை சுற்றி வரும்போது கடக்கும் தூரம் = 10 X 440மீ
= 4400மீ
= 4.4 கி.மீ
பயிற்சி 1.2
PAGE NO 10
1. சதுரத்தின் பக்க அளவுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரப்பளவைக்
காண்க.
விடை :
(i) 10 மீட்டர்
பக்கம் = 10மீ
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் X பக்கம்
=10 X 10
=100 ச.மீ
(ii) 5 செ.மீ
பக்கம் = 5 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் X பக்கம்
= 5 X 5
= 25 ச.செ.மீ
(iii)15 மீட்டர்
பக்கம் = 15 மீ
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் X பக்கம்
= 15 X 15
= 225 ச.மீ
(iv) 16 செ.மீ
பக்கம் = 16 மீ
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் X பக்கம்
= 16 X 16
= 256 ச.செ.மீ
2 பின்வரும் செவ்வகங்களின் பரப்பளவைக் காண்க
(i) நீளம் = 6 செ.மீ மற்றும் அகலம் = 3 செ.மீ
விடை :
நீளம் = 6 செ.மீ அகலம் = 3 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 6 X 3
= 18 ச.செ.மீ
(ii) நீளம் = 7 மீ மற்றும் அகலம் = 4 மீ
நீளம் = 7 மீ அகலம் = 4 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 7 X 4
= 28 ச.மீ
(iii) நீளம் = 8 செ.மீ மற்றும் அகலம் = 5 செ.மீ
நீளம் = 8 செ.மீ அகலம் = 5 செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 8 X 5
= 40ச.செ.மீ
(iv) நீளம் = 9 மீ மற்றும் அகலம் = 6 மீ
நீளம் = 9 மீ அகலம் = 6 மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 9 X 6
= 54ச.மீ
3. ஒரு மனையின் விலையானது 1 ச.மீட்டருக்கு ` 800 எனில், 15 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட மனையின் மொத்த விலை என்ன?
விடை :
நீளம் = 15 மீ அகலம் = 10 மீ
மனையின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 15 X 10
= 150ச.மீ
1 ச.மீட்டர் மனையின் விலை = 800
150 ச.மீட்டர் மனையின் விலை =150 X 800
= 1,20,000
4. ஒரு சதுரத்தின் பக்கம் 6 செ.மீ ஆகும். ஒரு செவ்வகத்தின் நீளம் 10 செ.மீ மற்றும் அகலம் 4 செ.மீ ஆகும். சதுரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சுற்றளவையும் பரப்பளவையும் காண்க.
விடை :
சதுரத்தின் பக்கம் = 6 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4 X பக்கத்தின் நீளம்
= 4 X 6
=24 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் X பக்கம்
= 6 X 6
=36 ச.செ.மீ
நீளம் = 10 செ.மீ அகலம் = 4 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு =2 (நீளம் + அகலம்)
= 2(10 + 4)
= 28செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 10X 4
= 40ச.செ.மீ
5. 14 மீ நீளமும் 10 மீ அகலமும் கொண்ட கூட்டரங்கத்திற்கு தரைப்பூச்சு செய்ய சதுரமீட்டருக்கு ` 60 வீதம் ஆகும் மொத்த உழைப்பூதியம் எவ்வளவு?
விடை :
நீளம் = 14செ.மீ அகலம் = 10 செ.மீ
கூட்டரங்கத்தின் பரப்பளவு = நீளம் X அகலம்
= 14X 10
= 140ச.மீ
ஒரு சதுரமீட்டருக்கு தரைப்பூச்சு செய்ய ஆகும் செலவு = 60
140 சதுரமீட்டருக்கு தரைப்பூச்சு செய்ய ஆகும் செலவு = 60 X 140
= 8400
PREPARED BY THULIRKALVI TEAM
No comments:
Post a Comment