பக்கம் 120
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1) கோட்டை விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.
அ) உதயகிரி ஆ) வேலூர் இ) செஞ்சி
விடை : ஆ) வேலூர்
2) திருமலை நாயக்கர் அரண்மனை யில்
அமைந்துள்ளது.
அ) சேலம் ஆ) திருமலை இ) மதுரை
விடை : இ) மதுரை
3) உலகின் இடைக்கா ல கையெழுத்துப் பிரதி நூலகங்களில் மஹால் ஒன்றாகும்.
அ) சரஸ்வதி ஆ) லட்சுமி இ) துர்கா
விடை :அ) சரஸ்வதி
4) பத்மநாபபுரம் அரண்மனை யில்
அமைந்துள்ளது.
அ) ஊட்டி ஆ) கன்னியாகுமரி இ) சென்னை
கலைச்சொற்கள்
விடை : ஆ) கன்னியாகுமரி
பக்கம் 121
5) கோட்டை, டேனிஷ் கோட்டை என்று
அழைக்கப்படுகிறது.
அ) திண்டுக்கல் ஆ) செஞ்சி இ) தரங்கம்பாடி
விடை : இ) தரங்கம்பாடி
II. பொருத்துக
1 செஞ்சிக் கோட்டை - அ) புதுக்கோட்டை
2 டேனிஷ் கோட்டை - ஆ)சென்னை
3 தமுக்கம் அரண்மனை - இ)விழுப்புரம்
4 திருமயம் கோட்டை - ஈ) மதுரை
5 புனித ஜார்ஜ் கோட்டை - உ) தரங்கம்பாடி
விடை : 1) இ 2) உ 3) ஈ 4) அ 5) ஆ
III. சரியா தவறா?
1) தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ,
பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி
செய்யப்பட்டுள்ளது. ( )
2) வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன.( )
3) திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களா ல்
கட்டப்பட்டது. ( )
4) ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும். ( )
5) பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில்
திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. ( )
விடை :
1) சரி 2) சரி 3) சரி 4) தவறு 5)சரி
பக்கம் 122
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1) தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள் யாவை?
விடை :
பத்மநாபபுரம் அரண்மனை
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை
திருமலை நாயக்கர் அரண்மனை
வேலூர்க் கோட்டை
திண்டுக்கல் கோட்டை
செஞ்சிக் கோட்டை
தரங்கம்பாடி கோட்டை
2) தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை :
வங்காள விரிகுடாவின் கரையில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது.
கோட்டையின்மையப் பகுதியில் நான்கு குவிமாடங்கள்உள்ளன.
3) செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?
விடை :
திருமண மண்டபம்,
கோவில்கள்,
ஆனைக்குளம்,
களஞ்சியங்கள்,
கண்காணிப்புக் கோபுரம்.
4) திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறு குறிப்பு வரைக.
விடை :
மதுரை நகரில் அமைந்துள்ளது.
நாயக்கர் அரச மரபால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கலைநயம்மிக்க
அரண்மனை ஆகும்.
தொல்பொருள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்குகின்றது .
5) தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்?அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
விடை :
தஞ்சாவூர் மராத்திய அரண்மனை முதலில் தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.
சிறப்பமைவுகள் :
ஒரு சுற்றுலாத்தலமாகும்.
அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி (Manuscript) நூலகம் (சரஸ்வதி மஹால்).
V விரிவான விடையளிக்க.
1) வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.
விடை :
16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால்
கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
ஆழமான மற்றும் அகலமான
அகழியால்(Moat) சூழப்பட்டுள்ளது.
இராணுவக் கட்டடக்கலைக்குச் சிறந்த ஓர்
எடுத்துக்காட்டு ஆகும்.
இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புற கோபுரங்கள், உட்புற கோபுரங்களைவிடத் தாழ்வாக உள்ளன.
1806ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயருக்கு
எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது
2) திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.
விடை :
திண்டுக்கல் கோட்டை
17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
18ஆம் நூற்றாண்டில் மைசூர்
அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
மதுரை நாயக்கர்களால் திண்டுக்கல் கோட்டைகட்டப்பட்டது.
இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.
கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை, இரட்டைச்
சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது.
3) பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக்கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.
விடை :
பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று நினைவுச்சின்னமாகும்.
கேரள கட்டடக்கலையைக் கொண்டு மரத்தால்
உருவாக்கப்பட்டதாகும்.
கலை மற்றும் கைவினைத்திறனுக்குச் சிறந்த
எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையில் இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல்வேறு பார்வையிடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment