PREPARED BY THULIRKALVI TEAM
பக்கம் 2
பாடல் பொருள்
கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்; காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச்செல்லாமை; ஆராய்ச்சிக்கு அழகு, இது இவ்வாறு முடியும் என்று உறுதி செய்து கூறுதல்;இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல் அரசனுக்கு அழகு, தன்நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1 வனப்பு - இச்சொல்லின் பொருள் ____________
அ) அறிவு ஆ) பொறுமை இ) அழகு ஈ) சினம்
விடை : இ) அழகு
2 நன்றென்றல் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...................................................
அ) நன் + றென்றல் ஆ) நன்று + என்றல் இ) நன்றே + என்றல்
ஈ) நன்றெ + என்றல்
விடை : ஆ) நன்று + என்றல்
பக்கம் 3
3 என்று + உரைத்தல் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..................................
அ) என்றுஉரைத்தல் ஆ) என்றுயுரைத்தல் இ) என்றஉரைத்தல்
ஈ) என்றுரைத்தல்
விடை : ஈ) என்றுரைத்தல்
4 கண்ணுக்கு அழகு ...................................................
அ) வெறுப்பு ஆ) பொறுமை இ) இரக்கம் ஈ) பொறாமை
விடை : இ) இரக்கம்
ஆ. பொருத்துக
1. கண்ணுக்கு அழகு - கேட்பவர் நன்று என்று சொல்லுதல்
2. காலுக்கு அழகு - இவ்வளவுதான் என உறுதி செய்து கூறுதல்
3. ஆராய்ச்சிக்கு அழகு - நாட்டு மக்களை வருத்தாமை
4. இசைக்கு அழகு - பிறரிடம் சென்று கேட்காமை
5. அரசனுக்கு அழகு - இரக்கம் காட்டல்
இ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
______________ ______________
______________ ______________
விடை :
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.
1. கண்ணுக்கு எது அழகு?
விடை : கண்ணுக்கு அழகு, இரக்கம் கொள்ளுதல்
2. காலுக்கு எது அழகைத் தருகிறது?
விடை : காலுக்கு அழகு, பிறரிடம் பொருள் வேண்டிச்செல்லாமை.
3. இசைக்கு அழகாக எது கூறப்படுகிறது?
விடை : இசைக்கு அழகு, அதனைக் கேட்போர் நன்று எனச் சொல்லுதல்
4. அரசனுக்கு அழகைத் தருவது எது?
விடை : அரசனுக்கு அழகு, தன்நாட்டு மக்களை வருத்த மாட்டான் என்று பிறர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.
உ. சிந்தனை வினா
நம்மைப் பிறர் பாராட்ட வேண்டுமெனில், நம்மிடம் எத்தகைய பண்புகள் இருக்கவேண்டும்?
விடை :
- உண்மை , நேர்மை, நீதி ஆகிய பண்புகள் இருக்க வேண்டும்
- காலம் தவறாமை, கடின உழைப்பு, விடா முயற்சி
இருக்க வேண்டும்
- அன்பு, இரக்கம, தன்னடக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும்
- கீழ்ப்படிதல், பிறருக்கு உதவுதல், கடமையைச் செய்தல் ஆகிய உயர்குணங்கள் நம்மிடம் இருத்தல் வேண்டும்
PREPARED BY THULIRKALVI TEAM
No comments:
Post a Comment