பக்கம் 93
I.சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பிரிதல் எனபது ___________ வகை இனப்பருக்கம்.
அ. பாலிலா ஆ. பால் இ. குஞ்சு பொரித்தல் ஈ. குட்டி ஈனுதல்
விடை : அ. பாலிலா
2. ___________ ஒரு முட்டையிடும் விலங்கு.
அ. பசுமாடு ஆ. மான் இ. ஆடு ஈ. வாத்து
விடை : ஈ. வாத்து
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் ___________ இல் பாதுகாக்கப்படுகின்றன.
அ. அருங்காட்சிய்கம் ஆ. சர்க்கஸ் இ. பண்ணை ஈ. சரணாலயம்
விடை : ஈ. சரணாலயம்
4. முண்டந்துறை சரணாலயம் ___________ மாவட்டத்தில் உள்ளது.
அ. திருப்பூர் ஆ. திருவாரூர் இ. திருநெல்வேலி ஈ. திருவள்ளூர்
விடை : இ. திருநெல்வேலி
5. நீலச் சங்கத்தின முக்கிய நோக்கம் விலங்குகளை ___________
அ. துன்புறுத்தல் ஆ. சிறைபிடித்தல் இ. காப்பாற்றுதல் ஈ. புறக்கணித்தல்
விடை : இ. காப்பாற்றுதல்
பக்கம் 94
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. நேரடியாக குட்டிகளை ஈனும் விலங்குகள் ___________ என்று அழைக்கப்படுகின்றன.
2. விலங்குகளை ___________, அவற்றை அழியும் நிலைக்கு கொண்டு செல்லும்.
3. கிர் தேசியப் பூங்கா ___________க்கு பெயர் பெற்றது.
4. நீலச் சிலுவை சங்கம் என்பது ஒரு ___________ நல அமைப்பாகும்.
5. நீலகிரி வரையாடு ஒரு ___________ இனமாகும்.
விடை : 1)பாலூட்டிகள் 2)வேட்டையாடுதல் 3)ஆசிய சிங்கங்களுக்கு 4) விலங்குகள் 5) அழிந்துவரும் உயிர்
III. பொருத்துக
1. கரு - பாலிலா இனப்பெருக்கம்
2. குட்டியீனும் விலங்கு - யானை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் - பூனை
4. முதுமலை - கருமுட்டை
5. துண்டாதல் - காண்டாமிருகம்
விடை :
1. கரு - கருமுட்டை
2. குட்டியீனும் விலங்கு - பூனை
3. அழியும் நிலையில் உள்ள விலங்குகள் - காண்டாமிருகம்
4. முதுமலை - யானை
5. துண்டாதல் - பாலிலா இனப்பெருக்கம்
IV. சுருக்கமாக விடையளி.
1. கருவுறுதல் என்றால் என்ன?
விடை : ஆண் உயிரணுக்கள் பெண் உயிரணுக்களைச் சென்றடையும்போது அவை ஒன்றோடொன்று
இணைகின்றன. இந்த உயிரணுக்களின் இணைவு கருவுறுதல் எனப்படும்.
2. பாலினப் பெருக்கத்தின் நிலைகள் யாவை?
விடை :
- கருவுருதலுக்கு முன்
- கருவுறுதல்
- கருவுருதலுக்கு பின்
3. பாலிலா இனப்பெருக்கத்தின் பல்வேறு வகைகளைக் கூறுக
விடை :
- பிளவிப் பெருக்கம்
- மொட்டு விடுதல்
- தூண்டுதல்
- சிதறல்கள்
4. குட்டியீனும் விலங்குகளுக்கும், முட்டையிடும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக்
கூறுக.
விடை :
5. நீலச் சிலுவை சங்கம் குறித்து சிறு குறிப்பு எழுதுக
விடை :
- நீலச் சிலுவை சங்கம் என்பது இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள விலங்குகளின நலனிற்கான பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும்.
- விலங்குகளின் ஆரோக்கிய வாழ்வைப் பாதுகாக்கும் அமைப்பாகும்.
- இ்நதியாவில் நீலச் சிலுவை சங்கம் 1959- இல் சென்னையில் உருவாக்கப்பட்டது
- V. விரிவாக விடையளி.
1. பாலிலா இனப் பெருக்க முறைகளை விளக்குக.
பிளவிப் பெருக்கம் :
முதுகெலும்பு அற்ற பல செல்களுடைய உயிரிகளில் பிளவிப் பெருக்கம் நடைபெறுகிறது.
இம்முறையில் ஒரு உயிரினம் தானாகவே இரண்டு உயிரினங்களாகப் பிரிவடைகிறது.
எ.கா: தட்டைப்புழு, கடற்பஞ்சு, கடல் வெள்ளரி
மொட்டு விடுதல் :
உடல் உறுப்புகள் புறவளர்ச்சி பெறுவதன் மூலம் இவ்வினப்பெருக்கம் நடைபெறுகிறது.
இம்மொட்டுக்கள் பின்னர் தாய் உடலிலிருந்து பிரிந்து புதிய உயிரினம் உருவாகின்றது.
எ.கா: ஹைட்ரா
துண்டாதல் :
உயிரிகளின் உடல் சிறுசிறு துண்டுகளாகப் பிளவுபட்டு பிரிந்து புதிய உயிரினம் உருவாகின்றது.
பின்னர் புதிய உயிரியாக வளர்சியடைவது துண்டாதல் எனப்படும்.
எ.கா: நட்சத்திர மீன்
சிதறல்கள் (ஸ்போர்கள்) :
இவை உடலதிலிருந்து பிரிந்து, சிதறலடைந்து காற்று அல்லது நீர் மூலமாக பரவுகின்றன.
பின்னர் ஏற்ற சுழலில் முழுமையான உயிரினமாக வளர்ச்சியடைகின்றன.
எ.கா: புரோட்டோசோவாக்கள், பாக்டீரியாக்கள்
2. விலங்குகள் அழிந்து போவதற்கான காரணங்கள் யாவை?
உணவு மற்றும் தங்கும் இடத்தை வழங்கக்கூடிய காடுகள்மனிதத் தேவைகளுக்காக அளிக்கப்படுகின்றன.
விலங்குகள் அவற்றின் கொம்பு , தோல், பல் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருள்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
நீர் மாசுப்பாடு மற்றும் காற்று மாசுப்பாடு, ஆகியவை விலங்குகளைப் பாதிக்கின்றன.
சில விலங்குகள் மனிதர்களால் அவற்றின் இயற்கை வாழிடத்தை விட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் தாவரங்களும், விலங்குகளும் பாதிப்படைகின்றன.
இயற்கை பேரழிவுகளான வெள்ளம், புயல் மற்றும் தீ விபத்து போன்ற காரணங்களால் விலங்குகள் அழிந்து போகும் நிலை ஏற்படுகிறது.
3. தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் குறித்து விவரிக்க.
தேசியப் பூங்கா
தேசியப் பூங்கா என்பது வ உயிரிகளின் நலனைப் பேணுவதற்கான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பாகும்.
இதனை தனிநபர் எவரும் உரிமையாக்கிக் கொள்ள முடியாது.
இது 100 முதல் 500 சதுர கிலோ மீட்டர் வரை இருக்கும்.
இந்தியாவில் ஜிம்கார்ப்பெட், காஸிரங்கா, கிர், சுந்தர்பான், கன்ஹா, பெரியார், கிண்டி போன்ற தேசிய பூங்காக்கள் உள்ளன.
சரணாலயம்
சரணாலயம் என்பது விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட பகுதி ஆகும்.
மரம் வெட்டுதல், காடு சார்ந்த பொருள்களைப் சேகரித்தல் மற்றும் தனிநபர் உரிமை கோருதல் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி உண்டு.
களக்காடு, முதுமலை, முண்டந்துறை, ஆனைமலை மற்றும் வேடந்தாங்கல் ஆகிய சரணாலயங்கள் தமிழகத்தில் உள்ளன.
PREPARED BY THULIRKALVI TEAM
No comments:
Post a Comment