5ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - சமூக அறிவியல் - அலகு 2 - வேளாண்மை - புத்தக வினா விடைகள் 5TH STD -3RD TERM - SOCIAL SCIENCE - UNIT 2 - VELAANMAI - BOOK BACK QUESTION ANSWERS
பக்கம் 134
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1)__________என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை
வளர்ப்பதாகும்.
அ)நீர்ப்பாசனம் ஆ)வேளாண்மை இ) அகழ்வாராய்ச்சி
விடை : ஆ)வேளாண்மை
2)________என்பவர் உணவு அல்லது
மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும்
வளர்க்கிறார்.
அ) மருத்துவர் ஆ) ஆசிரியர் இ) விவசாயி
விடை : இ) விவசாயி
பக்கம் 135
3)_______வேளாண்மை என்பது பயிர்களுடன்
விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ) வணிக ஆ) கலப்புப் பொருளாதார இ) தன்னிறைவு
விடை : ஆ) கலப்புப் பொருளாதார
4)______நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக்
கண்காணிக்கிறது.
அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆ) மெட்ரோ நீர் வாரியம்
இ) யூனியன் குடிநீர் வாரியம்
விடை : அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
5) தமிழகத்தில் உள்ள_________ மாவட்டத்தில் அதிகளவில்
பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ) கோயம்புத்தூர் ஆ) சென்னை இ) கடலூர்
விடை : அ) கோயம்புத்தூர்
II. பொருத்துக
1 தோட்ட வேளாண்மை -அ)விலங்குகளை வளர்ப்பது
2கலப்புப் பொருளாதார வேளாண்மை - ஆ)பழைமையான முறை
3 வணிக வேளாண்மை - இ) ஒற்றைப் பண பயிர்
4 கிணற்று நீர்ப்பாசனம் - ஈ) குடும்ப நுகர்வு
5 தன்னிறைவு வேளாண்மை - உ) விற்பனை நோக்கம்
விடை : 1) இ 2) அ 3) உ 4) ஆ 5) ஈ
III. சரியா தவறா?
1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். ( )விடை : சரி
2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன. ( ) விடை : தவறு
3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண்பாசன
முறையாகும். ()
விடை : சரி
4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும்.( )
விடை : தவறு
5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். ( )
விடை : சரி
பக்கம் 136
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. வேளாண்மை என்றால் என்ன?
விடை : வேளாண்மை என்பது சாகுபடிக்கு
மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல்
மற்றும் கால்நடைகளை வளர்த்தல்
ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும்
அறிவியல் ஆகும்.
2. விவசாயிகளைப் பற்றி எழுதுக.
விடை :விவசாயி என்பவர், உணவு அல்லது மூலப்பொருள்களுக்காகத்
தாவரங்களையும், விலங்குகளை யும் வளர்ப்பவர் ஆவார்.இந்திய விவசாயிகள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாவர்.
3. வேளாண்மையின் வகைகளைக் கூறுக.
விடை :தன்னிறைவு வேளாண்மை
வணிக வேளாண்மை
தோட்ட வேளாண்மை
கலப்புப் பொருளாதார வேளாண்மை
4. கிணற்று நீர்ப்பாசனம் என்றால் என்ன?
விடை : கிணற்றில் கிடைக்கும் ஊற்றுநீர் மூலம் விவசாயம் செய்வதையே கிணற்றுநீர் பாசனம் என்கிறோம்.
இது பழமையான முறையாகும்.
5. மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
விடை : மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
V விரிவான விடையளிக்க.
1. கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி
எழுதுக.
விடை : கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது, பயிர்களைப் பயிரிடுவதோடு
மட்டுமல்லாமல் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.
தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும்.
எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.
2. ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விவரி.
விடை :
கால்வாய் நீர்ப்பாசனம்
இந்தியாவில் உள்ள சில வற்றாத கால்வாய்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனம் கால்வாய் பாசனமாகும்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற
பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும்.
இதனால், நீர் ஆவியாவது குறைகிறது.
3. தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி
விடை : நெல் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில், அரிசி
மாநிலத்தின் முக்கிய உணவாகும்
அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும்.
பணப்பயிர்களில் பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துகள், காபி, தேயிலை,
இரப்பர், தேங்காய், எள் மற்றும் மிளகாய் ஆகியவை அடங்கும்.
மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ மற்றும் ரோஜா ஆகியவை
தமிழகத்தில் வளர்க்கப்படும் முக்கிய பூ வகைகளாகும்.
PREPARED BY THULIRKALVI TEAM
No comments:
Post a Comment