5ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - அலகு 2 - வாரித் தந்த வள்ளல் - புத்தக வினா விடைகள் 5TH STD - 3RD TERM - TAMIL - UNIT 2 - VAARI THANTHA VALLAL - BOOK BACK QUESTION ANSWERS - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, January 5, 2023

5ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - அலகு 2 - வாரித் தந்த வள்ளல் - புத்தக வினா விடைகள் 5TH STD - 3RD TERM - TAMIL - UNIT 2 - VAARI THANTHA VALLAL - BOOK BACK QUESTION ANSWERS

5ஆம் வகுப்பு - மூன்றாம் பருவம் - தமிழ் - அலகு 2 - வாரித் தந்த வள்ளல் - புத்தக வினா விடைகள் 5TH STD - 3RD TERM - TAMIL - UNIT 2 - VAARI THANTHA VALLAL - BOOK BACK QUESTION ANSWERS

          PREPARED BY THULIRKALVI TEAM
_______________________________________________________
வாரித் தந்த வள்ளல்
பக்கம் 7

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1 பொற்காசு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......................

அ) பொற் + காசு   ஆ) பொல் + காசு  இ) பொன் + காசு ஈ) பொ + காசு

விடை : இ) பொன் + காசு

2 கொடைத்திறம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ....................

அ) கொடை + திறம்           ஆ) கோடை + திறம்                  இ) கொட + திறம்                 ஈ) கொடு + திறம்

விடை : அ) கொடை + திறம்

பக்கம் 8

3 களிறு என்பது............... யைக்குறிக்கும்

அ) குதிரை      ஆ) கழுதை    இ) யானை     ஈ) ஒட்டகம்

விடை : இ) யானை

4 தரணி – இச்சொல்லின் பொருள் ....................

அ) மலை      ஆ) உலகம்     இ) காடு    ஈ) வானம்

விடை : ஆ) உலகம் 

5 ‘சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது ..................

அ) உணவு     ஆ) அமுது     இ) அன்னம்      ஈ) கல்

விடை :  ஈ) கல்
ஆ. பொருத்துக

1. பேழை - வாசல்

2. மாரி - கடன்

3. வாயில் - பெட்டி

4. ஆணை - மழை

5. இரவல் - கட்டளை

விடை :

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

1. பாணனின் குழந்தைகள் பசியால் வாடக் காரணம் என்ன?
விடை : தானியங்களும், மாவும் தீர்ந்துபோய் விட்டதால் பாணனின் குழந்தைகள் பசியால் வாடின 


2. வல்வில் ஓரியின் சிறந்த பண்பு யாது?
விடை :அள்ளிக்கொடுக்கும் வள்ளல் வல்வில் ஓரி, வீரத்திலும் சிறந்தவனாக விளங்கினான். 


3. பரிசு பெற்ற பாணன், மன்னனை எவ்வாறு வாழ்த்தினான்?
விடை : கற்ற கல்வி அறியாமை அகற்றுதல் போல, உற்ற துயர் துடைக்கும் வள்ளளே! உங்களின் குன்றாகப் புகழ் கொடைக் பண்பு ஓங்குக! வாழ்க!வாழ்க! நீவிர் வாழ்க! என மன்னனைப் பார்த்து பாணன் வாழ்த்தினான் 

4 ‘’வாரித் தந்த வள்ளல்“- இப்படக்கதை மூலம் நீவிர் அறிந்து கொண்டதை எழுதுக.

விடை :தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் தன்மை கொண்டவனாக இருந்தவர் வல்வில் ஓரி ஆவார். அவரைப் போல நாமும் வாழ வேண்டும். 
ஈ. சிந்தனை வினா

வல்வில் ஓரியைப் போல் ஈகைக் குணம் உனக்கிருந்தால் நீ யாருக்கெல்லாம் உதவிசெய்வாய்?

விடை : 

  • ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வேன்

  • ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்உதவுவேன்

  • பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உதவி செய்வேன்
உ. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாதுஎன்று எண்ணுவான்.சுதந்திரமாகச்செயல்படவேண்டுமென்பதே அவன் ஆசை.ஒருநாள், அவன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தைஅங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது“எனக்கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக்
கொண்டிருக்கிறது“ என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்துவிட்டார்பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன்இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது?ஆனால் அந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போதுஎன்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே இது போலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்“ என்று கூறினார்.

பக்கம் 9

1. குப்பன் எந்த வகுப்பில் படிக்கிறான்?
விடை : குப்பன்  ஐந்தாம் வகுப்பில் படிக்கிறான்.

2. பட்டத்தின் நூல் அறுந்ததும் அதன் நிலை என்னவாயிற்று?
விடை :  பட்டத்தின் நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டது


3. இக்கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன?
விடை : இக்கதையின் மூலம் நான் அறிந்தது, நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும் என்பதாகும்.
ஊ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1 கண்ணுக்கு அழகு பிறரிடம் -------------காட்டல்.

2 சிறுபஞ்ச மூலம் ___________ என்பவரால் எழுதப்பட்டது.

3 வாரி கொடுக்கும் வள்ளல்___________

4 நாட்டு மக்களை வருத்தாமை___________ க்கு அழகு

விடை :1) இரக்கம்   2)  காரியாசான் 3) வல்வில் ஓரி                  4)அரசனுக்கு

எ. பிறமொழிச் சொற்களை கலவாமல் எழுதுக.
 
1 என்னுடைய புக் டேபிளில் உள்ளது. ___________________

2 நான் டிவியில் நீயூஸ் பார்த்தேன் ___________________

3 தை மாதம் பர்ஸ்ட் நாள் பொங்கல் பெஸ்டிவெல் கொண்டாடினான்
__________________________________________

4 பாலன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டான். ___________________

விடை :

ஏ. பாடலை நிறைவு செய்க

நாடு அதை நீயும் நாடு
பாடு அதன் புகழ் பாடு
__________________________

_____________________________

_____________________________

_____________________________
விடை :


                      PREPARED BY THULIRKALVI TEAM

No comments:

Post a Comment