6ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, January 16, 2023

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு

6ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு 


ஆசியா மற்றும் ஐரோப்பா பாகம் -II 

1. கலைத்திட்ட எதிர்ப்பார்புகள் :

ஐரோப்பாக் கண்டத்தினைப் பற்றி அறிதல்,

2. கற்பித்தலின்  நோக்கங்கள் :

பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வளங்களைப் பற்றி கலந்துரையாடுதல். 

இக்கண்டங்களில் காணப்படும் கலாச்சார கூறுகளைப் பாராட்டுதல். 

கொடுக்கப்பட்ட இடங்களை வரைபடத்தில் குறிக்கும் திறனைப் பெறுதல். 


 3. ஆயத்தப்படுத்துதல்: 

சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்: 

 1. உலகில் எத்தனை கண்டங்கள் உள்ளன?

2.  நம்முடைய கண்டம் எது ? ஆசியா

3.  இங்கிலாந்து அமைந்துள்ள கண்டம் எது? ஐரோப்பா 

இவ்வாறாக மாணவர்களை ஆயத்தப்படுத்துத வேண்டும்.

 4. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்: 

மின்னட்டைகள், பொருத்தட்டைகள். 

5. வாசித்தல்: 

ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.

6. கருத்து வரைப்படம் :


7. தொகுத்தல்:
_________________________________________________________________________________
 வ.எண்                                          ஐரோப்பா சார்ந்த தகவல்கள்
__________________________________________________________________________________
                1.                         ஐரோப்பா பரப்பின் அடிப்படையில் மிகச் சிறியது.                                                            ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த கண்டமாகும்.
_________________________________________________________________________________
                                         34°51' வ முதல் 81°47'வ அட்சம் வரை பரவியுள்ளது. அதாவது,                 2.                       மிதவெப்ப மண்டலம் முதல் துருவப்பகுதி வரை                                                                   பரவியுள்ளது. 
___________________________________________________________________________________
              3.                         இது புவியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 
___________________________________________________________________________________
              4.                        ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி ஐரோப்பாவை                                                                                          ஆப்பிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது.
___________________________________________________________________________________
              5.                       ஸ்காண்டிநேவியன், ஐபீரியன், இத்தாலி மற்றும் பால்கன்                                              போன்றவை ஐரோப்பாவின் முக்கிய தீபகற்பங்களாகும். 

___________________________________________________________________________________
8.பரிந்துரைக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்:

 ஆசிரியர் செயல்பாடு: 

ஆசிரியர் மாணவர்களுக்கு ஐரோப்பாவின் அமைவிடம் இயற்கைப் பிரிவுகள், வடிகால் அமைப்பு, கால நிலை, இயற்கைத் தாவரங்கள், வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும், கலாச்சாரக் கலவை, சமயம் மற்றும் மொழி, கலை மற்றும் கட்டடக் கலை உணவு மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு : 

மாணவர்கள் ஐரோப்பாவில் இருக்கும் உலக அதிசயங்கள் மற்றும் முக்கியமான இடங்களையும் அவை அமைந்திருக்கும் நாடுகளையும் பட்டியலிடுதல். 

குழுச்செயல்பாடு (வினா-விடை முறை): 

மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழு ஆசியா மற்றும் ஐரோப்பாவை ஒப்பிட்டு வினா எழுப்ப மற்ற குழு விடை பகர்தலுமாக மாற்றி மாற்றி செய்தல். 

9.சிந்தனையை தூண்டும் செயல்பாடுகள்: 

 மாணவர்கள் ஐரோப்பா பொருளாதார வளமிக்க நாடாக இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்தல்.

 10.வலுவூட்டுதல்: 

கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை சூழலோடு கலந்துரையாடி குழுவிவாதம் செய்தல்.  

11. மதிப்பீடு :

1. ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை? 

2. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை? 

3. ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்ட நாடுகளின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக. 

4. ஐரோப்பாவின் மக்கள்தொகையைப் பற்றிச் சிறுகுறிப்புத் தருக.

5.  ஐரோப்பாவில் கொண்டாடப்படும் விழாக்கள் சிலவற்றின் பெயர்களைக் குறிப்பிடு. 

இது போன்ற வினாக்களைக் கேட்டு மதிப்பீடு செய்தல் வேண்டும்.


12. குறைதீர் கற்பித்தல் : 

மையக்கருத்தின் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கற்பித்தல்.

 13.தொடர் செயல்பாடு: 

மாணவர்களை ஆசியா மற்றும் ஐரோப்பா வரைபடத்தில் மலைகள், கடல்கள், ஆறுகள் இவற்றை குறிக்கச் சொல்லுதல்.

 14. கற்றலின் விளைவுகள் : 

மாணவர்கள் ஐரோப்பாவின் அமைவிடம், பரவல், அரசியல் பிரிவுகள், நிலத்தோற்றங்கள் ஆறுகள், காலநிலை இயற்கைத் தாவரங்கள், பொருளாதார நடவடிக்கைகள், கலாச்சாரக் கூறுகள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர். 


No comments:

Post a Comment