7ஆம் வகுப்பு தமிழ் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, January 16, 2023

7ஆம் வகுப்பு தமிழ் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு

7ஆம் வகுப்பு தமிழ் ஜனவரி 3வது வாரம் பாடக்குறிப்பு 

திருநெல்வேலி சீமையும், கவிகளும் 

1. கற்றலின் விளைவுகள் :

வள்ளல் சீதக்காதி, மாணிக்கவாசகர், திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழ்ப்படைப்புகளை அறிந்து போற்றுதல். 

திருநெல்வேலியில் இருந்து தோன்றிய முக்கிய தமிழ்ப்புலவர்கள், கவிஞர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளுதல். 

2. ஆயத்தப்படுத்துதல் : 

"சீமை என்றால் சீமை 

சிவகங்கை சீமை என்றால் சீமை 

வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்ந்து வெற்றி பெற்ற சீமை 

 சீமை என்றால் சீமை 

திருநெல்வேலி சீமை என்றால் சீமை 

மருது சகோதரர்கள் வாழ்ந்து புரட்சி செய்த திருநெல்வேலி சீமை." 

மேற்கண்ட பாடலினை இராகமாகப் பாடுவதன் மூலம் ஆயத்தப்படுத்துதல்.

 3. புதிய வார்த்தைகள்: 

திருநெல்வேலி சீமை 

மருது சகோதரர்கள் 

பன்னிரு திருமுறைகள் 

அகத்தியம் 

பொதிகைமலை 

4.கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்: 

மின்னட்டைகள், பொருத்தட்டைகள், தொடர்அட்டைகள்

5. வாசித்தல்: 

ஆசிரியர் பாடம் முழுவதையும் ஒருமுறை வாசித்தல். பின்பு பத்தி வாரியாக மாணவர்களை வாசிக்கச் சொல்லுதல்.

6.கருத்து வரைப்படம் :
 
7.தொகுத்தல்:
___________________________________________________________________________________
வ.எண்                     பாடப்பொருள் குறித்த தகவல்கள் 
 __________________________________________________________________________________                                    
        1.                             திருச்செந்தூர் முருகப்பெருமான் புகழினை                                                                          அருணகிரியார்  பாடியுள்ளார்.
___________________________________________________________________________________
        2.                             கோமதித்தாயின் புகழினைப் பாடியவர் அழகிய                                                                 சொக்கநாதர்.
___________________________________________________________________________________
         3.                          குற்றால மலைகளின் புகழினைப் பாடியவர் திரிகூட                                                        ராசப்பக் கவிராயர்.
___________________________________________________________________________________

8. பரிந்துரைக்கப்படும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் :

 விரிவுரை முறை: 

திருநெல்வேலி மாநகரம் ஆனது, பல்வேறு புகழ்களுக்கு சொந்தமானது. முதன்முதலில் 1707 ல் தோன்றிய தென்னிந்தியப் புரட்சியானது ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி, அங்குதான் தோன்றியது எனவும், பல்வேறு வீரம் மிகுந்த தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த மண் தான் திருநெல்வேலி என்றும் விளக்குதல். 

 குழுக்கற்றல் முறை: 

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினரை திருநெல்வேலி சீமையின் புகழ் பெற்ற கவிஞர்களின் பெயர்களையும், மற்றொரு குழுவினரை அந்தந்த கவிஞர்கள் பாடிய பாடல்களையும் கூறும்படி சொல்லுதல்.


தானே கற்றல் முறை: 

மருது பாண்டியர்கள் பற்றிய தகவல்களை நூலகம்/ இணையம் வாயிலாக சேகரித்து கூறச் சொல்லுதல்.

 9.வலுவூட்டுதல் : 

கொடுக்கப்பட்ட பாடப்பகுதியை சூழலோடு கலந்துரையாடி குழு விவாதம் செய்தல்.

 10. மதிப்பீடு :

 1. டி.கே.சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. 

 11. குறைதீர் கற்பித்தல் : 

மையக் கருத்தின் புரிதல் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பித்தல்.

 12. தொடர் செயல்பாடு : 

பல்வேறு விடுதலை போராட்ட வீரர்களின் படங்களைத் தொகுத்து ஆல்பம் தயாரிக்கச் சொல்லுதல்.




No comments:

Post a Comment