அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல் Beauty enhancing lemon peel - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 24, 2023

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல் Beauty enhancing lemon peel

அழகை அதிகரிக்கும் எலுமிச்சைத் தோல்  Beauty enhancing lemon peel

எலுமிச்சைத் தோல், உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹார்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்த பின், அதன் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். ஆனால் எலுமிச்சைச் சாற்றில் உள்ளது போலவே, அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. உச்சி முதல் பாதம் வரை, அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சைத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. 
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எலுமிச்சைத் தோலில் உள்ள சத்துக்கள், பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குகிறது. உடலில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், தோல், ஹார்மோன் சுரப்பிகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும், சீரான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. ரத்தக்குழாய் சுவர்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் இதயம் சீராக இயங்கும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கின்றன. கரோட்டினாய்டு நிறமிகள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பிளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பைக் கரைக்கின்றன. 
 அழகுக் குறிப்புகள்: 

1] எலுமிச்சம் பழத்தோலை குளிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். 

2] அக்குள் மற்றும் தொடையின் இடுக்குகளில், அதிக வியர்வையினால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கருமை படர்ந்திருக்கும். அந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யைத் தடவி, சில நிமிடங்கள் கழித்து எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து குளித்து வந்தால் படிப்படியாகக் கருமை குறையும். 
3] எலுமிச்சைத் தோலில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் முகப்பரு வராமல் தடுக்கிறது. எலுமிச்சைத் தோல், புதினா இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும். 

4] முகம், கை, காலில் இருக்கும் இறந்த செல்களை நீக்க எலுமிச்சைப் பொடியை உபயோகிக்கலாம். 3 டீஸ்பூன் எலுமிச்சை தோல் பொடி, 3 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ரோஜா பன்னீர் இவை அனைத்தையும் பசை போல கலக்கவும். இதை முகம், கழுத்து மற்றும் உடலில் பூசி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்யலாம். 
5] வீட்டில் மெனிக்யூர், பெடிக்யூர் செய்யும்போது எலுமிச்சைப் பொடியை சூடான தண்ணீரில் கலந்து கை மற்றும் கால்களில் பூசவும். 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளிச்சிடும்.

 6] எலுமிச்சை தோல் பொடி, மருதாணிப் பொடி ஆகியவற்றை கலந்து 'ஹேர் டை' தயாரித்தால் முடிக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.

Lemon peel helps in the health and smooth functioning of cartilage, tendons, skin and hormonal glands in the body. After squeezing the juice from the lemon, it is customary to throw away its skin. But just like lemon juice, its peel also has many benefits. From head to toe, lemon peel plays an important role in maintaining beauty.

It is rich in vitamins, minerals, fiber, potassium, calcium and antioxidants. Nutrients in lemon peel make teeth and bones strong. It helps in the health and smooth functioning of cartilage, tendons, skin and hormonal glands in the body. Increases the flexibility of blood vessel walls. This keeps the heart running smoothly. Antioxidants present in it prevent colon and breast cancer. Carotenoid pigments control high blood pressure. Flavonoids dissolve bad cholesterol.
  Beauty Tips:

1] Keep the lemon peel in the bath water and after some time take a bath to refresh the body.

2] Underarms and groin areas are dark due to excessive sweating due to bacterial infection. If you apply coconut oil on those spots and after a few minutes rub with lemon peel and take a bath, the darkness will gradually reduce.

3] The antimicrobial properties of lemon peel prevent acne breakouts. If you grind both lemon peel and mint and apply it on the face, the dirt on the skin will be removed and the face will be bright.

4] Lemon powder can be used to remove dead cells from face, hands and feet. Mix 3 teaspoons of lemon peel powder, 3 teaspoons of oatmeal powder, 2 teaspoons of honey, and 2 teaspoons of rose paneer into a paste. Apply this on the face, neck and body and massage and take a bath after 10 minutes. This removes the dead skin cells. Do this once a week.

5] While doing manicure and pedicure at home, mix lemon powder with warm water and apply it on hands and feet. Clean it after 15 minutes and the dirt will be removed and the nails will be shiny.

  6] Make 'hair dye' by mixing lemon peel powder and henna powder to give natural color to hair.

No comments:

Post a Comment