ஸ்பெஷல்டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா ?
dark_chocolate
அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவுப்பொருள்களில் ஒன்றுதான் சாக்லேட். அதிலும் குழந்தைகள் என்றாலே நினைவுக்கு வரும் ஒருபொருள்.
குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்தாலும், அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் பல் சொத்தை ஆகிவிடும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு.
அதுபோல வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்துவதுண்டு.
இதையடுத்து சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.
சாக்லேட்டின் தனிச்சுவைக்கு காரணமான கோகோ எனும் பொருள்தான் அனைவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது.
எனினும், இதுதவிர சாக்லேட்டுகளில் வேறு சில பொருள்களும் கலக்கப்படுகின்றன.
முடிந்தவரை ரசாயனம் கலக்காத கோக்கோ அதிமுள்ள சாக்லேட்டுகளை சாப்பிட்டால் நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
குறைந்தது 70% கோகோ பொருள் இருக்கும் சாக்லேட்டுகளை சாப்பிட வேண்டும். ஒரு சாக்லேட்டில் 700 கலோரி உள்ளது.
24 கிராம் சர்க்கரை இருக்கிறது.
அதிலும் சமீபத்திய ஓர் ஆய்வில், சர்க்கரை மற்றும் கொழுப்பு இல்லாத டார்க் சாக்லேட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், டார்க் சாக்லேட்டில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது.
டார்க் சாக்லேட் - பயன்கள்
♦ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கிறது.
♦ இதயக்கோளாறுகள், குறிப்பாக மாரடைப்பைத் தடுக்கிறது.
♦ ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
♦ உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சாக்லேட் சாப்பிட வேண்டுமெனில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.
♦ சரும அழகுக்கு உதவுகிறது.
♦ இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
♦ மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது.
♦ மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிட மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
♦ மருத்துவர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.
எந்த ஒரு உணவையும் அளவாக எடுத்துக்கொண்டால் அதன் முழு பலன்களைப் பெற முடியும். அந்தவகையில் டார்க் சாக்லேட்டையும் அளவோடு சாப்பிட்டால் பயன் இருக்கும்.
No comments:
Post a Comment