சாதனை படைத்த குழந்தைகளுக்கு 'ராஷ்ட்ரீய பால புரஸ்கர்' விருது 'Rashtriya Bala Puraskar' award for outstanding children - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 24, 2023

சாதனை படைத்த குழந்தைகளுக்கு 'ராஷ்ட்ரீய பால புரஸ்கர்' விருது 'Rashtriya Bala Puraskar' award for outstanding children

சாதனை படைத்த குழந்தைகளுக்கு 'ராஷ்ட்ரீய பால புரஸ்கர்' விருது 'Rashtriya Bala Puraskar' award for outstanding children
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, 11 குழந்தைகளுக்கு, 'ராஷ்ட்ரீய பால புரஸ்கர்' விருதுகளை, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.கலை, கலாசாரம், துணிச்சல், புதுமையான கண்டுபிடிப்பு, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த, 5 - 18 வயது குழந்தைகளுக்கு, பிரதம மந்திரியின் ராஷ்ட்ரீய பால புரஸ்கர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான விருது பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த, 11 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. 



ஜனாதிபதி மாளிகைகளில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குழந்தைகள் தான், இந்த நாட்டின் மதிப்பு மிகு சொத்துக்கள். குழந்தைகள் நாட்டின் நலனுக்கான விஷயங்களை சிந்திக்க வேண்டும். 
வளர்ச்சி அடைந்த நாட்டை கட்டமைப்பதற்காக பணியாற்ற வேண்டும். குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சியும் நாட்டு நலன், சமூகத்தின் நலனுக்கானதாகவும், அவர்களது எதிர்காலத்துக்கானதாகவும் இருக்க வேண்டும். இங்கு விருது பெற்ற குழந்தைகள் நிகழ்த்திய சாதனைகள், நம் நாட்டின் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
'Rashtriya Bala Puraskar' award for outstanding children

11 children who achieved achievements in various fields were awarded 'Rashtriya Bala Puraskar' by the President yesterday. The Prime Minister's Rashtriya Bala was awarded to children aged 5-18 years who achieved achievements in various categories including art, culture, bravery, innovation, social service and sports. Puraskar Award is given annually. This year's award was presented to 11 children who have made dramatic achievements in various fields.
  At a function held at the Presidential Palace yesterday, President Draupadi Murmu presented the awards to these children. Then he said: Children are the most valuable assets of this country. Children should think about things for the welfare of the country.

Work to build a developed country. Every effort of the children should be for the benefit of the country, society and their future. The achievements of the award-winning children here set a great example for the youth of our country. Thus he spoke.

No comments:

Post a Comment