17.03.2023 அன்று (வெள்ளிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட
இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய
கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும்
நகர்புறத்திலுள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில்
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 17.03.2023 அன்று (வெள்ளிக்கிழமை)
அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் (காலை 109.00 மணி முதல் மாலை (03.00 மணி
வரை) நடைபெற உள்ளது. இம்முகாமில் (5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ,
இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற
18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆண்/பெண் (இருபாலரும்) திரளாக
கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள்
10000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுடன் கலந்து கொள்ள உள்ளனர். மேலும்,
தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ்
20 க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய
வேலைவாய்பினை வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகம்
கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் தங்களது சுய விபர குறிப்பு (Bio-Data
ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன்
கலந்து கொண்டு பயன் பெறுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.
No comments:
Post a Comment