பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு | P.F. Interest rate hiked to 8.15 percent - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 29, 2023

பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு | P.F. Interest rate hiked to 8.15 percent

பி.எப். வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு  P.F. Interest rate hiked to 8.15 percent

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக இருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைவானது ஆகும். இந்தநிலையில், நடப்பு 2022-2023 நிதிஆண்டுக்கான வட்டியை முடிவு செய்ய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய வாரிய அறங்காவலர்கள் கூட்டம், அதன் தலைவரும், மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரியுமான பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்தது. அதில், பி.எப். வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, இம்முடிவு அதிகாரபூர்வமாக அரசிழில் வெளியிடப்படும் என்றும், 6 கோடி சந்தாதாரர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் தொழிலாளர் நல அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment