தினம் ஒரு தகவல் கார் பேட்டரி பராமரிப்பு
கார் உபயோகிக்கும் அனைவருமே காரில் பழுது ஏற்பட்டால் மட்டுமே பணிமனைக்கு காரை கொண்டு செல்வோம். ஆனால் காரில் பழுது ஏதும் ஏற்படாவிட்டாலும் குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓடிய நிலையில் காரை பணிமனைக்குக் கொண்டு சென்று காரின் சக்கரங்களை ‘வீல் அலைன்மென்ட்’ செய்ய வேண்டும். காரை செலுத்தும் ஸ்டீயரிங்குடன் நேரடியாக தொடர்புடையது சக்கரங்கள்தான்.
இது 3 பகுதிகளுடன் இணைந்தது. இவை மூன்றும் ஒருசேர இருந்தால் மட்டுமே காரின் டயர் தேய்மானம் குறைந்து அதிக நாள் உழைக்கும். இந்த மூன்று பகுதிகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்குத்தான் வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் வீல் அலைன்மென்ட் செய்தால் டயர் தேய்மானம் அதிகமாவதை தவிர்க்க முடியும்.
வாகனம் ஓட்டும்போது, வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாமல் நேராக செல்வதற்கும் வழிவகுக்கும். காரின் ஸ்டீயரிங் கண்ட்ரோலாக இருக்கும். இதனால் பயமின்றி காரை ஓட்டலாம். வீல் அலைன்மென்ட் செய்வதால் சிறு சிறு விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் ஆகியவை நீண்ட காலம் உழைக்க இது வழிவகுக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியில் உள்ள டிஸ்டில்டு வாட்டர் அளவை சோதிப்பது அவசியம். தண்ணீரின் அளவு அதில் உள்ள அதிகபட்ச குறியீடு வரை நிரப்ப வேண்டும்.
சிலர் காரை வாரம் ஒருமுறை, மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். இவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை என்ஜினை இயக்க வேண்டும். இதனால் பேட்டரியில் உள்ள மின்சக்தி குறையாமல் இருக்கும்.
சில நேரங்களில் பலர் காரை வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு சென்று 10 அல்லது 15 நாள் கழித்து திரும்புவர். அவ்விதம் நீண்ட நாள் காரை பயன்படுத்தாத சூழலில் பேட்டரியின் பாசிட்டிவ், நெகட்டிவ் ஒயர்களை கழற்றி வைத்துவிட்டு போகலாம். இதனால் கார் பேட்டரி இழப்பு தவிர்க்கப்படும். பேட்டரி சார்ஜ் குறையாமல் இருக்கும். ஊருக்கு திரும்பியதும் மீண்டும் ஒயரை பேட்டரியில் இணைப்பதன் மூலம் கார் உடனடியாக ஸ்டார்ட் ஆகும். பேட்டரி சார்ஜ் குறைவதையும் தவிர்க்க முடியும்.
கார் பேட்டரியை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.
இதன் மூலம் கார் பாதி வழியில் மக்கர் செய்து நின்று போவதைத் தவிர்க்க முடியும். கார் இயங்காதபோது காரினுள் விளக்கை எரியவிடுவது, காரில் பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தாலே பேட்டரியின் ஆயுள் கூடும். கார் நிறுவனம் அளிக்கும் மின்சார பாகங்கள் தவிர்த்து கூடுதலாக பேன்சி ஹார்ன், அலங்கார விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது பேட்டரியின் செயல்திறன் விரைவில் குறைந்துபோகும்.
No comments:
Post a Comment