எண்ணும் எழுத்தும் சிறப்புகள் குறித்து பெற்றோர்களை அழைத்து விழாக்கள் நடத்துவது - சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்
தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளிக்கு தீர்வு காண
2022ஆம் ஆண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்
தொலைநோக்கு பார்வையானது 2025ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும்
எண்ணறிவை எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் பெறவேண்டும்
என்பதேயாகும்.
குழந்தைகள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும் அடிப்படைக்
கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் வளர்த்தெடுப்பதில் எண்ணும்
எழுத்தும் திட்டம் ஒரு முக்கியப் பங்கை வகுக்கிறது.
கற்றல் மற்றும் கற்பித்தலால்
குழந்தைகளிடமும் ஆசிர்யர்களிடமும் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மக்களிடமும்
முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டுச் செல்ல "எண்ணும் எழுத்தும் கற்றலைக்
கொண்டாடுவோம்" நிகழ்வு வருகிற மார்ச் 16 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை அனைத்து
மாவட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
"எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்" இரு நிகழ்வுகளாக நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. DOWNLOAD FULL PROCEEDINGS HERE
No comments:
Post a Comment