தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்த குழு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 25, 2023

தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்த குழு

தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பழைய ஓய்வூதியத்திட்டம் 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்தத்திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்க வில்லை என்று நாடாளுமன்றத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மத்திய அரசு அறிவித்தது. 


 பழைய ஓய்வூதியத்திட்டத்தின்கீழ், அரசு ஊழியர்கள் தாங்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் நேர்பாதியை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். அகவிலைப்படி உயர்வுகள் வருகிறபோது, ஓய்வூதியம் மேலும் அதிகரிக்கிறது. இந்தப் பழைய ஓய்வூதியத்திட்டம், நிதி ரீதியாக நிலையானது அல்ல, இதற்கென பங்களிப்பு இல்லை என்பதால் அரசு கஜானா மீதான சுமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்கள்... இருப்பினும் பா.ஜ.க. அல்லாத பிற கட்சி ஆட்சி நடக்கிற ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தப்போவதாக அந்த மாநில அரசுகள் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன. 

இந்த அரசுகள், என்.பி.எஸ். என்னும் தேசிய ஓய்வூதியத்திட்டத்தின்கீழ் சேர்ந்துள்ள நிதியைத் திரும்பத்தர வேண்டும் என்று கோரி உள்ளன. ஆனால் அந்த நிதியைத் திரும்பத்தர முடியாது, அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த தேசிய ஓய்வூதியத்திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ரூ.8.81 லட்சம் கோடி நிதி சேர்ந்துள்ளது. இது கடந்த 4-ந் தேதி நிலவரம் ஆகும். தமிழ்நாடு, மேற்கு வங்காளம் விதிவிலக்கு.... 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் (ஆயுதப்படைகள் தவிர்த்து) தேசிய ஓய்வூதியத்திட்டம் (என்.பி.எஸ்) அமல்படுத்தப்பட்டுள்ளது. 

பெரும்பாலான மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இந்த புதிய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவிக்கை வெளியிட்டன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 2 மாநிலங்கள் மட்டும் இது தொடர்பாக அறிவிக்கை வெளியிடவில்லை என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.) கூறுகிறது. நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு இந்த நிலையில் தேசிய ஓய்வூதியத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக மத்திய நிதித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைப்பதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதாவை நிறைவேற்றுவதற்காக அறிமுகம் செய்தபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நிதி விவேகத்தைப் பேணுவதுடன் ஊழியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அணுகுமுறையை உருவாக்கவும் நிதித்துறை செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த அணுகுமுறை வடிவமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment