ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத்
திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள்
உட்பட) கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும்
குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2023-24ஆம் ஆண்டிற்கான 6 முதல் 18
வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுத் திறனுடைய குழந்தைகள் உட்பட)
கண்டறியும் கணக்கெடுப்பு குடியிருப்பு வாரியாக கீழ்க்காணும் வழிகாட்டு
நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.
இப்பணியினை அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/
ஆசிரியர்கள் ஆசிரியப் பயிற்றுநர்கள்/ அங்கன்வாடி பணியாளர்கள்/ கல்வி தன்னார்வலர்கள்/
சிறப்புப் பயிற்றுநர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இல்லம் தேடிக் கல்வி
தன்னார்வலர்கள் / தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து
கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக் கல்விப் பதிவேடு புதுப்பித்தல் பணியினை நடத்திட வேண்டும்.
No comments:
Post a Comment