மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை புதிய முயற்சி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, March 18, 2023

மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை புதிய முயற்சி

பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களை தேர்வை எழுத வைக்க கல்வித்துறை புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது. அதன்படி துணைத் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களை தேர்வை எழுத வைக்க கல்வித் துறை முயற்சி செய்கிறது. அந்த வகையில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 
 * இந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களில் பொதுத் தேர்வுக்கு வராதவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கும், இத்தேர்வின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்குவதற்கும், அனைத்து தேர்வர்களும் தேர்வினை எதிர்கொள்வதற்கும், துணைத் தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்வதற்கும் கண்காணிக்கவும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும்.👉விடுப்பு விவரங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய கையேடு - TNSED Leave Management System - Manual for Leave Module! வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10 மற்றும் 24-ந்தேதிகளிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த கூட்டங்களை அவசியம் நடத்த வேண்டும். மாணவர் பட்டியல் 

 * தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்கள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால் தேர்வு நடைபெறும் அன்று பிற்பகலிலேயே பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு அதை பகிர வேண்டும். அதேபோல் நீண்ட நாள் விடுப்பில் இருக்கும் மாணவர்களின் விவரங்களையும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு முன்னரே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். 
 * 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த மாணவர் பட்டியலை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பகிருவதோடு, அவர்கள் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதிசெய்ய வேண்டும். 

 * நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்ப்பட்டியலை சேகரித்து மாணவர்களை பள்ளியில் நடைபெறும் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு வரவழைத்து பயிற்சியில் பங்கேற்பதையும் அவர்கள் உறுதிசெய்ய வேண்டும். இலவச உதவி எண்

 * ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வாயிலாக மாணவர்கள், பெற்றோருக்கு பொதுத்தேர்வு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.👉 சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
 * அதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோருக்கும் துணைத்தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். 

 * துணைத்தேர்வு குறித்த மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை 14417 இலவச உதவி மைய எண்ணை பயன்படுத்தலாம். துணைத்தேர்வுக்கான முன்தயாரிப்புக்கும் உயர்கல்வி படிப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கும் பள்ளி அளவில் சிறப்பு பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, பாட ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் பள்ளி மேலாண்மைக்குழு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment