பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வழங்குதல் - தெளிவுரை அளித்தல் - சார்பு. - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, March 30, 2023

பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வழங்குதல் - தெளிவுரை அளித்தல் - சார்பு.

பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை
செயல்முறைகள், சென்னை-6.


ந.க.எண். 34116/டி1/இ4/2013, நாள்.29.03.2023

பொருள்: 

பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க,
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும்
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்-நியமன ஒப்புதல்
வழங்குதல் - தெளிவுரை அளித்தல்-சார்பு.

தாக்கல்

பார்வை:
1. அரசாணை (நிலை) எண்.165, பள்ளிக்கல்வி
(தொ.க.2(1)த்துறை, நாள் 17.09.2019

2. சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு
எண். WA.(MD).No. 76/2019, etc., batch cases
நீதிமன்ற தீர்ப்பு நாள் 31.03.2021.

3. The Remarks filed by the Directorate in the Apex
court on the above judgments.

4. உச்சநீதிமன்ற Special Leave to Appeal (C)
No:15702/2021 -ல் 14.03.2022 நாளிட்ட
இடைக்காலத் தீர்ப்பாணை

5. சென்னை
உயர்நீதிமன்ற வழக்கு எண்.
W.P.NO.3194/2020, இதர தொகுப்பு வழக்குகளில் தீர்ப்பு
நாள் 18.04.2022

6. சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கு
எண்W.P.(MD)NOs.6340/2018, நீதிமன்ற தீர்ப்பு நாள்
02.09.2022

7. தமிழ்நாடு அரசிதழ் எண்.22,நாள்.13.01.2023-ல்
வெளியிடப்பட்ட தமிழ்நாடு தனியார் பள்ளிகள்
(வரன்முறைப்படுத்துதல்) விதிகள், 2023

பார்வை (2)ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 31.03.2021
நாளிட்ட தீர்ப்பாணையின்படி ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல், பணி நிரவல் மேற்கொள்ளுதல் சார்ந்த வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியிருந்தது.


பார்வை (3) ன்படி உச்சநீதிமன்றத்தில் மேற்காணும் நீதிமன்ற வழக்கு சார்ந்து
செய்யப்பட்ட வாதவுரையில் ஒவ்வொரு வழிகாட்டுதலுக்கும்,
பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்ற விளக்கம் அளிக்கப்பட்டது. WA(MD).No.76/2019, தொகுப்பு வழக்குகளில் 31.03.2021 நாளிட்ட தீர்ப்பாணையின் வழிகாட்டுதல்களில் பத்தி 95 (f)-ல் (i)க்கு மட்டும் பார்வை(4)ன்படி உச்சநீதிமன்றம் 14.03.2022ல் தடையாணை விதித்து ஆணை வழங்கியுள்ளது

No comments:

Post a Comment