ISRO இளம் விஞ்ஞானி திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, March 20, 2023

ISRO இளம் விஞ்ஞானி திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு

இளம் விஞ்ஞானி திட்டம்: பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு 

XXXசென்னை, மார்ச் 19: இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள் ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019– ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ல் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்து ரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டு தோறும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, நடப்பு ஆண் டுக்கான ‘யுவிகா' பயிற்சி மே 15 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. https://www.isro.gov.in/YUVIKA.html 
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு திங்கள்கிழமை (மார்ச் 20) தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையத ளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற் காலிக பட்டியல் ஏப்ரல் 10-இல் வெளியிடப்படும். அந்த மாணவர் கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாகும். தேர்வாகும் மாணவர்களுக்கு திருவனந் தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்க ளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment