பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, April 6, 2023

பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-06. ந.க.எண்.019528/எம்/இ1/2022, நாள்:06.04.2023 

பொருள்: 

பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம்  வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்பு. 

பார்வை: 

1. மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் 2411/F2/2021,நாள் 20.03.2023 

2. மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் 2411/F2/2021,நாள் .04.2023. 

*** 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு அரசுப் பொதுத் தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவியர்களுக்கு மூன்றாம் பருவம்/. ண்டு இறுதித் தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. 

பார்வை-1ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு 17.04.2023 முதல் 21.04.2023 வரையும், பார்வை-2ல் தெரிவிக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி, 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். 
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்டங்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்குத் தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

இம் மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், ஆசிரியர், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளிக் கடைசி வேலை நாளாக 28.04.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
தொடக்கக் கல்வி இயக்குநர் குபு23 பள்ளிக் கல்வி ஆணையர் பெறுநர்: அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை / தொடக்கக்கல்வி).

No comments:

Post a Comment