மத்திய அரசின் ஐ. எம். எஸ். கல்வி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் ஐ. எம். எஸ். கல்வி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ஸ் (ஐ. எச். எம்) ஆளுநர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ஸ் (ஐஎச் எம்) கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலக தரம்வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை போதிப்பதில் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 13-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இது குறித்து இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூல்ஸ் ஆளுநர் குழுவின் தலை வரும், சுற்றுலா, கலாசாரம் மற்றும் சமய அறநிலையத்துறையின் முதன்மைச் செயலருமான டாக்டர் பி. சந்திரமோகன் கூறியிருப்பதாவது:
அமெரிக்க பத்திரிகை சார்பில் உலகின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தர வரிசையில் ஏழு அறிவியல் சார் அளவீடுகள் அடிப்படையில் நிறுவனத்துக்கு இந்த இடத்தை வழங்கியுள்ளது.
2016-ம் ஆண்டு 38-ஆவது இடத்தில் இருந்த சென்னை ஐஎச்எம் நிறுவனம், புத்தாக்க தொழில் நுட்பப்பயிற்சியை அடிப்படையாக கொண்டு சிறப்பாக செயல் பட்டதால் தற்போது 13-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பள்ளியில் எம். எஸ். சி விருந்தோம்பல் நிர்வாகம் மற்றும் பி. எஸ். சி விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தகுதியுடையவர்கள் htttps://nchmjee.nta. nic. in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment