சாகர் மித்ரா திட்டத்தில் பணியாற்ற
விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகர் மித்ரா
திட்டத்தில் 2 கடலோர மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்ப
டையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஏ.பி. மகா
பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் தமிழகத்தி
லுள்ள 600 கடலோர மீனவ கிராமங்களில் சாகர் மித்ரா என்கிற
முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு தகுதியானவர்
கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதன்படி, மயிலாடுதுறை
மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களுக்கும் தலா ஒருவர்
வீதம் 28 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில், காலியாக
உள்ள நாயக்கர்குப்பம் மற்றும் வானகிரி ஆகிய 2 மீனவ கிரா
மங்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்
கப்படுகின்றன. மயிலாடுதுறை மீன்வளம் மற்றும் மீன்வளத்
துறை உதவி இயக்குநர் (இருப்பு) சீர்காழி அலுவலகத்தில் விண்
ணப்பப் படிவம் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து
மயிலாடுதுறை மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்
குநர், 41, தென்பாதி மெயின் ரோடு, மயிலாடுதுறை (இருப்பு)
சீர்காழி-609111 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் அல்லது நேரடி
யாக 24.4.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு மாத
ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்.
தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும்
மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்:
04364-271455 மற்றும் கைப்பேசிஎண்: 9384824258-இல் தொடர்
புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment