கல்லூரி மாணவர்களுக்கு இரு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, April 8, 2023

கல்லூரி மாணவர்களுக்கு இரு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்

கல்லூரி மாணவர்களுக்கு இரு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் 

சென்னை, ஏப். 7: கல்லூரி மாணவர்களுக்கு நிதித் துறை சார்ந்த இரு சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம், அந்தப் படிப்புகள் இலவசமாக கற்றுத்தரப்ப டும் எனத் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் மேற்கொண்டு வருகிறது. அதன்ஒரு பகு தியாக கல்லூரி மாணவர்களுக்கு வங்கியியல் (Banking and finan ce) மற்றும்ஃபின்டெக் ஸ்கில்ஸ்'(Fintech Skills) ஆகிய 2 சான்றிதழ் படிப்புகளை திறன் மேம்பாட்டு மையம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மைய உதவியுடன் தொடங் கப்படும் இந்த படிப்புகள் மாநி அரசின் நிதியுதவியுடன் மாணவர்க ளுக்கு பயிற்றுவிக்கப்பட உள்ளன. 

இதற்கு அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்லூ ரிகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர் கள் www.tnfinskills.com என்ற இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு ஏப்ரல் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி பெறுபவர்களில் வங்கியியல் படிப்புக்கு 250 மாணவர்களும், ஃபின்டெக் படிப்புக்கு 200 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். இதையடுத்து பயிற்சி வகுப்புகள் மே மாதம் தொடங்கும். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசின் 'நான் முதல்வன்’ திட்டத் தின் கீழ் மேம்பாட்டு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது


No comments:

Post a Comment