பள்ளி கல்வியில் திறன்களை அங்கீகரிக்க ஆலோசனை - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, April 26, 2023

பள்ளி கல்வியில் திறன்களை அங்கீகரிக்க ஆலோசனை

பள்ளி கல்வியில் திறன்களை அங்கீகரிக்க ஆலோசனை பள்ளி கல்வியில் திறன்களுக்கு அங்கீகாரம் அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.

ஜி20 கல்வி பணிக்குழு ஜி20 அமைப்பின் கல்வி பணிக்குழு முதலாவது கூட்டம், சென்னையில் நடந்தது. 2-வது கூட்டம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த மாதம் நடந்தது. 3-வது கூட்டம், ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது. அதையொட்டி, புவனேஸ்வர் சென்றுள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று அங்கு பேட்டி அளித்தார். 
அவர் கூறியதாவது:- ஜி20 அமைப்பில் கல்வி சார்ந்த பிரச்சினைகளை ஆலோசிப்பது, உலகளாவிய மாதிரிகளை நாம் நடைமுறைப்படுத்த உதவும். புதிய தேசிய கல்வி கொள்கையை புரிதலுடன் அமல்படுத்த முடியும். 
திறமையே வெல்லும் பள்ளி கல்வியில் திறன்களுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. எதிர்கால திறன்களை வரையறுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை ஒன்றுசேர வேண்டும். 
திறமைக்கும், பட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டையும் பிரித்து பார்ப்பது அவசியம். திறமைதான் வெல்லும் என்ற எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment