தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான
(2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில்
பதிவு செய்யலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி
உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க
வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த
இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக்
கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம்
இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம்
செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The
Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 08/05/2023
அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது
நேரடியாகவும் செலுத்தலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால
அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக
அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும்
நாள்
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்
தொடர்பு எண் : 1800 425 0110
நாள்: 05.05.2023
SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்
கட்டணம் ஏதுமில்லை
பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும்
ليست هناك تعليقات:
إرسال تعليق