+2 மதிப்பெண் சான்றிதழை 12.05.2023 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, May 8, 2023

+2 மதிப்பெண் சான்றிதழை 12.05.2023 முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

அனுப்புநர் சா.சேதுராம வர்மா, அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 600 006. ந.க.எண்.023720/எச்:1/2023 ஐயா/அம்மையீர், பெறுநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி. 

பார்வை: பொருள்: அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-62022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) மாணவர்களுக்கு விநியோகித்தல்-தொடர்பாக. நாள்: 
08.05.2023 இவ்வலுவலக இதே தேதியிட்ட செய்திக் குறிப்பு. www 08.052023 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 12.05.2023 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD.ஐக் கொண்டு பள்ளிமாணவர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் உரிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) 12.05.2023 முதலே பள்ளித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் / தனித் தேர்வர்களுக்கு தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும், விநியோகம் செய்யப்படவேண்டும்.


கூடுதல் அறிவுரைகள்:- 

1. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களை (Statement of Marks) சரிபார்த்து, அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு உரிய நாளில் மாணவர்களுக்கும் அளித்திட வேண்டும். 
2. மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு. பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக, அத்திருத்தங்களை பின்னர் இவ்வியக்கத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

3. தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 
4. அசல்மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பெறப்பட்டப் பின்னர், சம்பந்தப்பட்ட தேர்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் Counter Foil-ல் சம்பந்தப்பட்ட தேர்வரது பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி Counter Foil-ல் மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபார்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும். மேற்காண் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ஒம்/- இயக்குநர் 

நகல்: 

1. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள். 

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்). 3. எச்4.பிரிவு (அலுவலகம்)


No comments:

Post a Comment