என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 2-ந் தேதி தொடங்கும்
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில், கலந்தாய்வு வருகிற ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி தொடங்க இருப்பதாக, கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
என்ஜினீயரிங் படிப்பு விண்ணப்ப பதிவு
2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கிவைத்தார்.
விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி ஆகும்.
விண்ணப்ப பதிவு தொடங்கிவிட்ட நிலையில், கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவலை கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் அடுத்த மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. READ FULL DETAILS PLEASE CLICKK HERE
ليست هناك تعليقات:
إرسال تعليق